ராமநாதபுரம், தேனி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பட்டியலின மக்களின் நலனுக்காக செய்துதரப்பட்டு, சேதமடைந்த வசதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு.

உயர்நீதிமன்றத்தில் மனு

புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பட்டியலின மக்களின் நலனுக்காக அரசால் கட்டித் தரப்பட்ட வீடுகள், சாலைகள், மற்றும் மயானம் உள்ளிட்ட வசதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே அவற்றை ஆய்வு செய்து, தீர்வை வகைப்படுத்தி, அரசு திட்டத்தை அடையாளம் கண்டு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும், அது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், பூர்ணிமா அமர்வு, "அரசு வசதிகளை செய்து தந்த பின், அதனை பராமரிப்பதில் மக்களின் கடமையும் உள்ளது. தனிநபர் ஒழுக்கம் தேவை. பராமரிப்பது நம் கடமை என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்து, செய்து தரப்பட்ட வசதிகளை பராமரிப்பது தொடர்பாக ஏதேனும் திட்டம் உள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Source: Read Full Article