பணியின்போது அலட்சிலப்போக்கிலும், கவனக்குறைவாகவும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

17 கைதிகள் தப்பியோடிய விவகாரம்

தேனி அருகே மாவட்ட சிறையிலிருந்து கடந்த 26-ஆம் தேதி ஒரே நேரத்தில் 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனைத்து கைதிகளும் பிடிபட்ட நிலையில், இவ்விவகாரம் சிறைத்துறை மற்றும் தவெக அரசு மீதான கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இதன் எதிரொலியாக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு, சிறைத்துறை காவல் இயக்குநராக ஏடிஜிபி சங்கர் நியமிக்கப்பட்டார். மேலும் தேனி மாவட்ட சிறையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிய நாகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முதலமைச்சர் கடும் எச்சரிக்கை

சிறைத்துறையினருக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள முதலமைச்சர், சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமெனவும், மெத்தனப்போக்குடன் செயல்பட்டால் கடும் நட்வடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்

Source: Read Full Article