மதுரை அரசு மருத்துவமனை இதயவியல் துறை சமர்ப்பித்து உள்ள பட்டியலின் அடிப்படையில் தேவையான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு

தேவையான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்

மதுரை ஒத்தக்கடை கதிர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் இதயவியல் துறையில் உள்ள கேத் ஆய்வகத்திற்கான கருவிகள் மற்றும் கதிர் வீச்சு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கு தேவையான அவசரகால நிதிக்கான அனுமதியை வழங்க கோரிக்கை விடுத்தும் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. எனவே, மதுரை அரசு மருத்துவமனை இதயவியல் துறை சமர்ப்பித்து உள்ள பட்டியல் அடிப்படையில் தேவையான உபகரணங்களை விரைவாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா?

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கே கே.ராமகிருஷ்ணன் அமர்வு, " மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கோரியுள்ள உபகரணங்களை வாங்க ஆகும் காலம் தொடர்பாக அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், மதுரை அரசு மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்

Source: Read Full Article