இரு நாடுகளுக்கோ அல்லது பலநாடுகள் சார்ந்த சர்வதேச பிரச்சனை என்றால் நாம் அடிக்கடி கேள்விப்படும் அமைப்பின் பெயர் ஐ.நா சபை. உலக நாடுகளுக்கு இடையிலான அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்புதான் இந்த ஐ.நா சபை.

உலகப்போருக்கு பின் உருவான ஐ.நா சபை

1945 முன்னர் உலக அளவில் இயங்கிவந்த சர்வதேச சங்கமானது, இரண்டாம் உலகப் போதைத் தடுக்கத் தவறியதால் ஒரு வலிமையான அமைப்பை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஐக்கிய நாடுகள் சபை. 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் ஜூன் 26 வரை, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கூடி ஐக்கிய நாடுகள் சபைக்கான சாசனத்தை உருவாக்கினர். இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு அக்டோபர்-24 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஐக்கியநாடுகள் சபை செயல்பாட்டுக்கு வந்தது.

எப்படி இயங்குகிறது ஐ.நாபை

ஐ.நா சபை என்பது பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில், பொருளாதார மற்றும் சமூக சபை உள்ளிட்ட பிரிவுகளையும் உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF),ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) உறுப்பு அமைப்புகளை கொண்டு செயல்படுகிறது. இதில் மொத்தமாக 193 நாடுகள் உள்ள நிலையில் ஐ.நா சபையில் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய 5 நாடுகள் உள்ளன.

ஐ.நா சபையின் பணி என்ன?

உலகில் அமைதியை நிலை நாட்டுவது, நாடுகளுக்கிடையேயான பிரச்சனையை சுமூகமான முறையில் தீர்ப்பதே இவ்வமைப்பின் தலையாய பணி ஆகும். மேலும் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படை உரிமைகளை கிடைக்கச்செய்வது, சிறுவர்களின் கல்வியை உறுதி செய்வது, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் தீவிரவாதத்தை ஒழித்தல், மனித உரிமைகள் மீறப்பட்டால் விசாரித்து நீதி வழங்குவது உள்ளிட்டப்பணிகளை செவ்வனே செய்து வருகிறது ஐ.நா அமைப்பு. இதன் தலைமை அதிகாரியாக செயல்படும் பொதுச்செயலாளர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஐ.நாவின் தற்போதைய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆண்டோனியோ குட்ரஸ் செயல்படுகிறார்.

Source: Read Full Article