மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?

மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
News Image

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வித்தியாசமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், பிறந்த குழந்தையின் முகத்தில் அடர்த்தியான கருப்பு மீசை இருப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. குழந்தை மீசையுடன் பிறந்ததாகப் பலரும் பகிர்ந்து வரும் நிலையில், இந்த வீடியோ உண்மையா போலியா என்கிற குழப்பம் உருவாகியுள்ளது

மீசையுடன் பிறந்த குழந்தை

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் மத்துவமனையில் படுக்கையில் இருக்கும் குழந்தையின் முகத்தில் தெளிவான மீசையும் தாடையைச் சுற்றி முடிகளும் இருப்பதுபோல்  தெரிகிறது. குழந்தை கண்களைத் திறப்பதும், தலையை அசைப்பதும், சிரிப்பதுபோன்ற முகபாவனைகளைக் காட்டுவதும் வீடியோவைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், குழந்தை உண்மையிலேயே மீசையுடன் பிறந்தது என பலரும் நம்பி வருகிறார்கள்

INSOLITE | Un bébé arrivé au monde avec une moustache fait le tour des réseaux sociaux https://t.co/bs1j6xMztW
— 75 Secondes 🗞️ (@75secondes) October 24, 2026

நிஜமா ? போலியா ?

இந்த வீடியோ அக்டோபர் 20ஆம் தேதி ‘Newborn Cuteness’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டதாக உண்மைச் சரிபார்ப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே பக்கத்தில் மீசை மற்றும் தாடியுடன் இருப்பதுபோன்ற குழந்தைகளின் பல்வேறு வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

லெபனானைச் சேர்ந்த ‘அந்நஹார்’ செய்தி நிறுவனத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு இந்த வீடியோவை ஆய்வு செய்து, அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாக முடிவு செய்துள்ளது. Hive என்ற கருவியின் ஆய்விலும், வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு 87.9 சதவீதமாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே, குழந்தை மீசையுடன் பிறந்ததாகப் பரவும் தகவல் உண்மையல்ல என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு முடி இருக்குமா?

உண்மையில், சில குழந்தைகள் பிறக்கும்போதே உடலிலும் முகத்திலும் மெல்லிய முடிகளுடன் இருக்கலாம். இதற்கு ‘லானுகோ’ (Lanugo) என்று பெயர். கருவில் இருக்கும்போது உருவாகும் இந்த மென்மையான முடிகள் பொதுவாகப் பிறந்த பிறகு இயற்கையாக உதிர்ந்துவிடும். ஆனால், வைரல் வீடியோவில் இருப்பதுபோன்ற அடர்த்தியான, தெளிவான மீசையை இதனுடன் ஒப்பிட முடியாது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் காட்சிகள் உண்மையான வீடியோக்களைப் போலவே தோன்றும் காலகட்டத்தில், சமூக வலைதளங்களில் பரவும் வித்தியாசமான காட்சிகளை உடனடியாக நம்பிப் பகிராமல், அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியமாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks