5 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளதாகவும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டி

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி கட்டாயம் போட்டியிடும் எனவும், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தானே வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாகவும் அனைத்து சாதியினருக்கும், அனைத்து மதத்தினருக்கும் தான் எப்போதும் பொதுவேட்பாளர்தான் எனவும் குறிப்பிட்டார்.

சிறைத்துறை அமைச்சர் பதவி விலகுவாரா?

தமிழகத்தில் ஏற்கனவே 13 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குள் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்கியுள்ளதாகவும் சீமான் விமர்சித்தார். மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் மின்தடை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்வதாகவும், தேனியில் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியதற்கு தார்மீக பொறுப்பேற்று சிறைத்துறை அமைச்சர் பதவி விலகுவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

"போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றவில்லை"

தமிழக அரசு அறிவித்துள்ள தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.755 கோடியை அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்த சீமான், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவக் கருவிகள், அடிப்படை வசதிகள் இல்லை என சாடினார். சிங்கப்பெண் சிறப்பு மூலம் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து தவறானது எனவும், தேர்தல்களில் தோற்றாலும் மற்ற கட்சிகள் போல் போலி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றவில்லை எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Source: Read Full Article