குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவது எப்படி? விஏஓக்களுக்கு கலெக்டர் கொடுத்த ஐடியா

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவது எப்படி? விஏஓக்களுக்கு கலெக்டர் கொடுத்த ஐடியா
News Image

குழந்தை திருமணங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் நல்லசிவம், குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதில் கிராம நிர்வாக அலுவலர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் கிராமங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குழந்தை திருமணம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரியவந்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து விரைவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்குவது குறித்தும் பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது. அத்தகைய குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதுடன் அவர்களின் எதிர்கால நலனுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது குழந்தை திருமணங்களை தடுப்பது மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு துறையினருடன் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் குழந்தை திருமணத் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks