"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
News Image

"திருமணம் மீறிய உறவு"

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் , மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

எனவே குடும்பத் தகராறு காரணமாகக் சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த சுகன்யா , தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சித்குமார் தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்திருக்கின்றனர். பின்னர் நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, தனது இரு குழந்தைகளுடன் கடந்த இரண்டு மாதங்களாக ரஞ்சித்குமாருடன் சுகன்யா வசித்து வந்ததாகத் தெரிகிறது.

"தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல்"

இந்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு சுகன்யா தனது இரு குழந்தைகளையும் பள்ளி விடுமுறை காரணமாக அவரது தம்பி வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது குழந்தைகளின் கை, கால், வயிறு மற்றும் தொடை உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்கள் மற்றும் சூடு வைத்த காயம் இருந்ததைக் கண்டு அவரது தம்பி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து குழந்தைகளிடம் விசாரித்த போது, தாய் சுகன்யாவும் ரஞ்சித்குமாரும் சேர்ந்து தங்களைத் தாக்கியதாகக் குழந்தைகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குழந்தைகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சுகன்யாவின் தம்பி அவரை தட்டிக் கேட்ட போது , அவருக்கு சுகன்யா மற்றும் ரஞ்சித் குமார் இருவரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக சுகன்யாவின் தம்பி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் , குழந்தைகளின் தாய் சுகன்யா மற்றும் அவரது கள்ளக் காதலன் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks