இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எந்தக்கட்சிக்கு எத்தனை இடங்கள்?

இஸ்ரேலில் மொத்தமுள்ள 121 இடங்களில் நெதன்யாகுவின் லிகுத் கட்சி தனித்து 27 இடங்களையும் அதான் கூட்டணி மொத்தமாக 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எதிரணிக்கு தலைமை தாங்கும் காடி ஐசன்கோட் கட்சி தனித்து 21 இடங்களையும், அதன் கூட்டணி மொத்தமாக 48 இடங்களிலும் வென்றுள்ள நிலையில் அரபுக்கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றியுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்களை எந்தக்கூட்டணியும் பெறாததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

ஆட்சியமைக்க போவது யார்? தொடரும் சர்ப்ரைஸ்!

வெளிப்படையாக சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளின் படி அரபுக்கட்சிகள்தான் கிங்மேக்கராகும் சூழல் உள்ளது. இந்நிலையில் கூட அரபுக்கட்சிகளுடன் கூட்டணி இல்லையென நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த யூத சித்தாந்த ரீதியிலான முடிவை அவர் அறிவித்தது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், பெரும்பான்மை யூத மக்களின் ஆதரவை பெரும்நோக்கில் நெதன்யாகு அறிவித்த இம்முடிவின் மூலம் எதிரணியினருக்கும் அரபுக்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான சிக்கலையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.

அரசியலில் அனைத்தும் சாத்தியமா?

நெதன்யாகு மீண்டும் ஆட்சியமைக்க அவருக்கு இருக்கும் வாய்ப்பு என்னவென்றால் எதிரணியில் இருக்கும் சில கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவது மட்டும்தான். அவ்வாறு ஆட்சியமைக்க ஆதரவு கிடைக்குமானால் ஏற்கனவே இஸ்ரேலின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்த நெதான்யாகு மீண்டும் 7-வது முறையாக பிரதமராக பதவியேற்பார். ஆனால், காடி ஐசன்கோட்டிற்கு இரு வாய்ப்புகள் உள்ளன, ஒன்று அரபுக்கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பது. அவ்வாறு அரபுக்கட்சிகளின் ஆதரவுடன் காடி ஐசன்கோட் ஆட்சியமைத்தால் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் நிலைபாடு மற்றும் ஆதிக்கத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றொறு வாய்ப்பு என்னவென்றால் நெதன்யாகு தரப்பில் உள்ள கூட்டணி கட்சிகளை தன்வசப்படுத்தி பிரதமராவது. இந்நிலையில் அரபுக்கட்சிகள் வெளிநாடுகளின் ஆதரவுடன் தேர்தலில் முறைகேடு செய்து 19 இடங்களில் வென்றதாக நெதன்யாகு குற்றம்சாட்டி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் இதே நிலை நீடித்து, எந்தக்காட்சியாலும் பெரும்பான்மையை நிருபிக்க இயலவில்லை என்றால் மறு தேர்தல்தான் ஒரே வழி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article