சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போஸ்டர், பேனர் மற்றும் கொடிகளை நட வேண்டாம் என எம்.எல்.ஏ., இசிஆர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இணையத்தில் விமர்சனத்திற்குள்ளான சரவணன்

பொதுவாக போஸ்டர் பேனர் மற்றும் கட்சிக்கொடி இல்லாமல் எந்த ஒரு அரசியல் கட்சியும் செயல்படாது. பேனர் மற்றும் கொடிக்கம்பம் வைப்பதால் கடந்த காலங்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ள நிலையில் அதனை தவிர்க்க வேண்டும் என தொடர்ச்சியாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அறிவித்தது.

ஆனால் இசிஆர் என்றாலே அங்கு சரவணன் ஆதரவாளர்கள் போஸ்டர் பேனர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் ஆகியவை கண்டிப்பாக இருக்கும் என்ற அளவுக்கு அந்த தொகுதி முழுக்க திரும்பும் திசை எங்கும் போஸ்டர் பேனர்,கலாச்சாரம் மேலோங்கி இருந்தது. குறிப்பாக அந்த தொகுதியில் முதலமைச்சர் விஜய் வீடு அமைந்திருப்பதால் அவர் வரும்போதும், போகும்போது கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே தினம் ஒரு போஸ்டர் வடிவமைக்கப்படும். இது கடந்த ஐந்து மாதங்களாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

ராகுலை வைத்து முடித்து விட்ட நெட்டிசன்கள்

இப்படியான நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்தார். அப்போது முதலமைச்சரின் விஜயை சந்திக்க வந்த அவரை சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து இசிஆர் சரவணன் வரவேற்றார். அவ்வளவுதான் உடனடியாக நெட்டிசன்கள் ஏஐ தொழில் நுட்பம் மூலம் இசிஆர் சரவணன் ராகுல் காந்தியுடன் இருப்பது போல போஸ்டர், பேனர்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பி கிண்டல் செய்தனர். இந்த நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

கால்ல விழுறேன்.. இனி இப்படி பண்ணாதீங்க

போஸ்டர் வேண்டாம்… பேனர் வேண்டாம்… மக்கள் சேவையே போதும்! ❤️ சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள். இனி வரும் காலங்களில் போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, தேவையற்ற இடங்களில் கொடிகள் நடுவது போன்றவற்றை https://t.co/RohApk8vvp

— ECR.P.Saravanan (@EcrPSaravanann) October 12, 2026

வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சென்னை புறநகர் தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளரும், சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான இசிஆர் சரவணன், “ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழக ஒன்றியம், வட்டம், ஊராட்சி, மகளிரணி மற்றும் பிற அணி நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை செய்ய வேண்டும்.

அதனால் போஸ்டர், பேனர், கொடி நடும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமாகும். பலமுறை பல மீட்டிங்கில் நான் இந்த போஸ்டர், பேனர் வேண்டாம் என சொல்லி விட்டேன். ஒருசிலர் என் அறிவிப்பை மீறியும் செயல்படுகிறீர்கள். இதனால் கண்டிப்புடன் சொல்கிறேன். இனி போஸ்டர், பேனர், கொடி நடும் விஷயங்களை கைவிடுங்கள். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விட்டு முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு நாம் நல்ல விஷயம் செய்ய வேண்டும். அதனால் இன்று முதல் என்னுடைய உத்தரவை மதித்து போஸ்டர், பேனர், கொடி நடும் விஷயங்களை முற்றிலும் தவிர்க்கவும்.

அதுமட்டுமல்லாமல் புதிதாக பதவி கொடுத்தவர்கள் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுகிறார்கள். இது இனிவரும் காலங்களில் வேண்டாம். போஸ்டர் மூலம் தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என அவசியமில்லை. மக்கள் சேவை மூலம் அதனைக் காட்டுங்கள். இதனை உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Source: Read Full Article