மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிலாவது, குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக சுமார் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்.10) கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அக்.11, 12 தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.

அக்.13 முதல் 15-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் 10 செ.மீ, குன்னூர், எடப்பள்ளியில் தலா 9 செ.மீ, பர்லியாரில் 9 செ.மீ, கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாரியில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கேரளம் மாநிலம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று10-ந்தேதி மழை இருக்கும் என்றும் அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த மழையின் காரணமாக இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மலைப் பகுதிகள் மற்றும் கொச்சி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் சேர்த்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் (சில நேரங்களில் 50 கி.மீ வரை) பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மேலும், கடுமையான இடி-மின்னல் தாக்கங்கள் இருக்கும் என்பதால் பொதுமக்கள் திறந்த வெளிகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.மேலும் மலைப்பிரதேசங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு (குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா வழியாக) பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், உள்ளூர் வானிலை மாற்றங்களைச் சரிபார்த்து விட்டுப் பயணத்தைத் தொடங்குவது பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

Source: Read Full Article