மேய்ச்சல் நிலங்கள் மாயம்... மாடுகளின் வயிற்றில் குப்பைக் கிடங்கு! டெல்டாவில் தொடரும் உயிர் பலி அபாயம்!

மேய்ச்சல் நிலங்கள் மாயம்... மாடுகளின் வயிற்றில் குப்பைக் கிடங்கு! டெல்டாவில் தொடரும் உயிர் பலி அபாயம்!
News Image

தஞ்சாவூர்: மேய்ச்சல் நிலங்களை விழுங்கிய நகரமயமாக்கலால் குப்பையை தின்னும் கால்நடைகளின் உயிருக்கு உலை வைத்து வருகிறது பிளாஸ்டிக் கழிவுகள். இந்த அவலம் எங்கு தெரியுங்களா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துடன் பின்னிப் பிணைந்த கால்நடை வளர்ப்புத் தொழில் தற்போது பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஒருகாலத்தில் பசுமையான வயல்வெளிகளிலும், அறுவடைக்குப் பிந்தைய நிலங்களிலும் சுதந்திரமாக மேய்ந்து வந்த கால்நடைகள், இன்று மேய்ச்சலுக்கான இடங்கள் சுருங்கி வருவதால் உணவு தேடி தெருக்களிலும், சந்தைகளிலும், குப்பைமேடுகளிலும் சுற்றித்திரியும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

உணவுக் கழிவுகளுடன் கலந்திருக்கும் பிளாஸ்டிக் பைகள், நைலான் கயிறுகள் உள்ளிட்ட செரிமானமாகாத பொருட்களை மாடுகள் விழுங்குவதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் அறுவைச் சிகிச்சையின்போது ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து 48 கிலோவும், மற்றொரு மாட்டின் வயிற்றிலிருந்து 75 கிலோவும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட சம்பவங்கள் கால்நடைகளின் தற்போதைய அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு

கால்நடைகள் என்பவை வெறும் வளர்ப்புப் பிராணிகள் மட்டுமல்ல. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகவே கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. பால் உற்பத்தி, விவசாயப் பணிகளுக்கான உதவி, இயற்கை உரம் தயாரித்தல், கன்றுகள் உற்பத்தி எனப் பல்வேறு வகைகளில் கால்நடைகள் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளன. கிராமப்புறங்களில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் குடும்ப வருமானத்துக்கும் கால்நடை வளர்ப்பு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

2019-ம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்பின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,50,527 மாடுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 2,00,248 மாடுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்த்து 2,51,634 மாடுகளும் இருந்தன. இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து 8,02,409 மாடுகள் இருந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் தீவன வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வயல்வெளிகள் மாயம்; மேய்ச்சல் நிலங்கள் சுருக்கம்

ஒரு காலத்தில் டெல்டா மாவட்டங்களில் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை என்பது அரிதான ஒன்றாகவே இருந்தது. வயல்வெளிகளின் வரப்புகள், அறுவடைக்குப் பிறகு காலியாகக் கிடக்கும் நிலங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் சுற்றுப்புறங்களில் இயற்கையாக வளர்ந்த புற்கள் ஆகியவை கால்நடைகளுக்கு முக்கிய உணவிடங்களாக இருந்தன.

விவசாயப் பணிகள் முடிந்த பின்னர் வயல்களில் கிடைக்கும் வைக்கோல், பயிர்க்கழிவுகள், புற்கள், இலைகள் போன்றவை கால்நடைகளின் தீவனத் தேவையைப் பெருமளவில் பூர்த்தி செய்தன. ஆனால், காலப்போக்கில் நகரமயமாக்கல், குடியிருப்புகளின் விரிவாக்கம், சாலைகள் அமைத்தல், நிலங்களின் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் மேய்ச்சல் நிலங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

இதனால் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம், உலர் தீவனம், தண்ணீர், கொட்டகை பராமரிப்பு, கால்நடை மருத்துவம் என அனைத்திற்கும் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பால் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதி தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கே சென்றுவிடுவதால் சில கால்நடை வளர்ப்போர் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.

தெருக்களிலும் குப்பைமேடுகளிலும் உணவு தேடும் மாடுகள்

மேய்ச்சல் நிலங்கள் குறைந்ததும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை வழங்க முடியாத சூழ்நிலையும் சில இடங்களில் மாடுகள் உரிய பராமரிப்பின்றி தெருக்களில் அவிழ்த்துவிடப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் மாடுகள் கூட்டம் கூட்டமாகச் சாலைகளில் சுற்றித்திரிவதைக் காண முடிகிறது.

வீடுகள், உணவகங்கள், காய்கறிச் சந்தைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தினமும் வெளியேற்றப்படும் உணவுக் கழிவுகள் முறையாகப் பிரித்து அகற்றப்படாமல் சாலையோரங்களிலும், திறந்தவெளிகளிலும் கொட்டப்படுகின்றன. இவற்றில் மீதமான சாதம், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களுடன் பிளாஸ்டிக் பைகள், உணவுப் பொட்டலங்களின் உறைகள், நைலான் கயிறுகள் மற்றும் இதர கழிவுகளும் கலந்து கிடக்கின்றன.

உணவின் வாசனையால் ஈர்க்கப்படும் மாடுகள் குப்பைகளை கிளறி உணவைத் தேடுகின்றன. அப்போது உணவுப் பொருட்களுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் விழுங்கிவிடுகின்றன. மாடுகள் திட்டமிட்டு பிளாஸ்டிக்கை உண்பதில்லை. உணவுக் கழிவுகளுடன் கலந்து கிடப்பதால் அவற்றை அடையாளம் காண முடியாமல் உட்கொள்கின்றன. இந்தச் சிறிய கவனக்குறைவு காலப்போக்கில் கால்நடைகளின் உயிரையே பறிக்கும் ஆபத்தாக மாறுகிறது.

வயிற்றுக்குள் சேரும் பிளாஸ்டிக்; உயிருக்கு எமனாகும் குப்பைகள்

புற்கள் மற்றும் தாவர உணவுகள் கால்நடைகளின் செரிமான மண்டலத்தில் இயற்கையாகச் செரிமானம் அடைகின்றன. ஆனால் பிளாஸ்டிக் பைகள், நைலான் கயிறுகள், கம்பிகள் மற்றும் இதர செரிமானமாகாத பொருட்கள் வயிற்றுக்குள் சென்றால் அவை இயற்கையாக வெளியேறாமல் தேங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொடர்ந்து இத்தகைய பொருட்களை உட்கொள்ளும்போது அவை வயிற்றுக்குள் ஒன்றோடொன்று சிக்கி உணவுக் கழிவுகளுடன் சேர்ந்து கட்டிகளாக மாறக்கூடும். இதனால் வயிற்றின் இயல்பான இயக்கம் பாதிக்கப்பட்டு செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உணவு உட்கொள்ளும் அளவு குறைதல், அசைபோடும் செயல்பாடு பாதிக்கப்படுதல், வயிறு உப்புசம், உடல் எடை குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, பால் உற்பத்தி குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

சில நேரங்களில் கால்நடைகள் உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சோர்வடைந்து படுத்துவிடுகின்றன. உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடைந்து உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

தஞ்சையில் அதிர்ச்சி: ஒரு மாட்டின் வயிற்றில் 48 கிலோ பிளாஸ்டிக்

டெல்டா மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களே சாட்சியாக உள்ளன.

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட பசுமாட்டுக்கு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த மாட்டின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், நைலான் கயிறுகள், கம்பிகள் உள்ளிட்ட செரிமானமாகாத பொருட்கள் மொத்தம் 48 கிலோ அகற்றப்பட்டன. ஒரு கால்நடையின் வயிற்றில் இவ்வளவு அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல், தஞ்சையை அடுத்த சிட்கோ வளாகத்தில் பசுமாடு ஒன்று மயங்கிய நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்த அருகானுயிர்காப்பு சுற்றுச்சூழல் அறக்கட்டளை குழுவினர் அந்த மாட்டை மீட்டு பரிசோதனைக்காக ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் வயிற்றிலிருந்து 75 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

விபத்தில் உயிரிழந்த மாட்டின் வயிற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள்

தஞ்சாவூர் புறவழிச்சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஒரு மாடு உயிரிழந்தது. அந்த மாட்டின் வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது. மாட்டின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கும், உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக இருந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

ஒரு மாட்டின் வயிற்றிலிருந்து 48 கிலோ, மற்றொரு மாட்டின் வயிற்றிலிருந்து 75 கிலோ என பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட சம்பவங்கள் கால்நடைகள் எதிர்கொள்ளும் ஆபத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன. உணவுக் கழிவுகளுடன் பிளாஸ்டிக்கை கலந்து வீசும் மனிதர்களின் அலட்சியம், வாயில்லா ஜீவன்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

கால்நடைகளுக்கு உணவு கிடைக்காமல் குப்பைமேடுகளை நாடுவது ஒருபுறம் இருக்க, அவை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சுற்றித்திரிவதும் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத சாலைகளில் திடீரென மாடுகள் குறுக்கிடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் மோதுவதால் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

விபத்தில் சிக்கும் மாடுகளும் எலும்பு முறிவு, உட்புறக் காயங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. இதனால் மனிதர்களின் பாதுகாப்பும் கால்நடைகளின் உயிரும் ஒருசேர கேள்விக்குறியாகின்றன.

தீர்வு காண வேண்டியது அவசியம்

மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பது, கால்நடைகளுக்கான பொதுவான தீவன வசதிகளை மேம்படுத்துவது, கால்நடை உரிமையாளர்கள் அவற்றைக் கைவிடுவதைத் தடுப்பது, உணவுக் கழிவுகளைத் தனியாகவும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகவும் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகியுள்ளன.

குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். உணவகங்கள், காய்கறிச் சந்தைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாகச் சேகரித்து அகற்ற வேண்டும். கால்நடை வளர்ப்போரும் தங்களது மாடுகளைப் பாதுகாப்பாகப் பராமரித்து, தெருக்களில் அவிழ்த்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நகரமயமாக்கலும் வளர்ச்சியும் தவிர்க்க முடியாதவை என்றாலும், அதன் பெயரில் இயற்கை மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதும், உணவுக் கழிவுகளுடன் பிளாஸ்டிக் கலந்து வீசப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கும் கால்நடைகளைப் பாதுகாப்பது விவசாயிகளின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையும் ஆகும். குப்பையில் உணவு தேடும் நிலைக்கு கால்நடைகளைத் தள்ளாமல், மேய்ச்சல் நிலங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய நேரம் இது!

டெல்டா மாவட்டங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்களையும் தீவன வசதிகளையும் உருவாக்குவதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் கால்நடை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks