"இதய நோய் - ஃபோன்டன் சிகிச்சை"

ஒற்றை வென்ட்ரிக்கிள் இதய நோய் உள்ள குழந்தைகளுக்கு , ஃபோன்டன் சிகிச்சை முறை செய்வதன் மூலம் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு ஒரு மாற்று வழியை வழங்குகிறது. சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை , உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் உலக சாதனை படைத்துள்ளது. இதை அறிவிக்கும் நிகழ்வாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அப்பல்லோ நிறுவனம் சார்பாக அவர்கள் செய்த சாதனையை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது சிகிச்சை குறித்து பேசிய டாக்டர் சி.எஸ். முத்துகுமரன் ;

ஒற்றை வென்ட்ரிக்கிள் இதய நோய் உள்ள குழந்தைகள் , ஃபோன்டான் நிலைக்கு முன்பாகப் பல பெரிய இதய அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளாகின்றனர். உடற்கூறியலும் இரத்த ஓட்ட இயக்கவியலும் பொருத்தமாக இருந்தால் , வடிகுழாய் அடிப்படையிலான அணுகுமுறையானது , மற்றொரு பெரிய திறந்த இதய அறுவை சிகிச்சை இன்றி ஃபோன்டான் சிகிச்சை முறையை நிறைவு செய்ய நமக்கு உதவும்.

ஏற்கெனவே ஒரு பெரிய இதய சிகிச்சையை மேற்கொண்ட ஒரு குழந்தைக்கு, மற்றொரு பெரிய செயல்முறையின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என்று கூறினார்.

மேலும் இது குறித்து இயக்குநர் டாக்டர் நெவில் ஏ. ஜி. சாலமன் பேசிய போது ,

இது அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ஒரு புதிய நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியது அல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக தான். மேலும் குழந்தை இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சையை ஒன்றிணைப்பதே இதன் நோக்கம் என்று கூறினார்.

தொடர்ந்து அப்போலோ மருத்துவமனைகளின் வியூக இயக்குநர் சிந்துரி ரெட்டி கூறுகையில் ;

ஒரு சிக்கலான நோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் மறுபரிசீலனை செய்யும் போது, ஒரு குழந்தைக்கும் அவர்களது குடும்பத்திற்கும் என்ன நடக்குமோ அதை மட்டுமே கூறி செயல்படுத்துகிறோம்.

பெர்குடேனியஸ் ஃபோன்டன் செயல்முறைகளை எட்டியிருப்பது அந்த அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. இது, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றொரு பெரிய திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சிகிச்சை முறையை வழங்குகிறது.

அப்போலோவில் , மருத்துவ நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை ஒன்றிணைத்து, எங்கள் இளம் நோயாளிகளுக்கு என்ன சாத்தியம் என்பதை மாற்றுவதன் மூலம் , அந்த எல்லையைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதே எங்கள் லட்சியமாகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் , அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டலத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் காளிமூர்த்தி, அப்போலோ மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், சென்னையின் பிரிவுத் தலைவர் டாக்டர் சுஷிலா நாராயணசாமி ஆகியோர் மருத்துவக் குழுவினருடன் கலந்து கொண்டனர்.

Source: Read Full Article