கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!

கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
News Image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் முன்னாள் தவெக நிர்வாகி போதைப்பொருளுடன் சிக்கிய சம்பவத்தை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன்  கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் நடுத்தெருவில் வசிக்கும் சுகன் என்பவர் வீட்டில் 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நுழைந்து சோதனை நடத்தினர்.

தொடர்ந்து சுகன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு
கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டைச் சேர்ந்த பூபாலன் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அவரின் வீட்டை சோதனை செய்ததில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூபாலன் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அவர் இந்த கடத்தலை சாதகமாக பயன்படுத்தி தன் நண்பர்களையும் கூட்டு சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து பூபாலன், சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள் மொத்தம் 135 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த திருப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன் தவெகவில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டு தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் கடுமையாக சாடி வருகிறது.

கேள்வி மேல் கேள்வி எழுப்பிய உதயநிதி

அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற தவெக நிர்வாகி பூபாலனை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

முதலமைச்சர் டிரக்ஸை விடு ஸ்போர்ட்ஸை எடு என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், முதலமைச்சர் சொல்வதை விடு, டிரக்ஸை எடு  என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்? ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா? ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன டம்மி முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா?

இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks