திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விசிக தலைவர் திருமாவளவன்

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விசிக தலைவர் திருமாவளவன்
News Image

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் என்னை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று கூறி தொடர்ந்து எழுந்து வந்த சந்தேகங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கும் அதிரடியாக பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவா தன் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு கொண்டவர் என்றும், ரஜினிகாந்த் படங்கள் உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவரது மறைவு கலைத்துறைக்கும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கும். குறிப்பாக, அரிசியின் விலை உயரும்போது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் கூட்டு முயற்சி மேற்கொண்டால் மட்டுமே விலைவாசி உயர்வை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும் எனவும் குறிப்பிட்ட அவர், காவிரி நீர் பங்கீடு மற்றும் முதலமைச்சர்களின் சந்திப்பு குறித்த விமர்சனங்கள் தேவையற்றது. தண்ணீர் இல்லாத சூழலில் இது குறித்து பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, நதிநீர் இணைப்பு என்பது நீண்ட கால திட்டம். இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் இயற்கைக்கு எதிராக இருக்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து வேண்டுமானால் நாம் எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ கருத்து சொல்லலாம். ஆனால் நதிநீர் இணைப்பே கூடாது, இப்போதைக்கு தண்ணீர் இல்லை, ஆகவே இந்த பேச்சுவார்த்தை பயனற்றது என கூறுவது அரசியல் அடிப்படையிலான விமர்சனம். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும். எந்த வகையிலும் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பது தேசத்தின் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் உகந்ததல்ல என்பதுதான் எங்களது நிலைப்பாடு என்றார்.

அப்போது அவரிடம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகவும், அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருமாவளவன் களம் இறங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த திருமாவளவன், "நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டேன். அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாகத் திட்டமிட்டு விஷமத்தனமான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் தேவையில்லாத வதந்தி" என்றார்.

கடந்த பொதுத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் தனத சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால், அப்பகுதிக்குக் காலியாகிய இடத்திற்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே தமிழக அரசியலில் இத்தொகுதி குறித்த விவாதங்களும், பல்வேறு யூகங்களும் தீவிரமடைந்து குறிப்பிடத்தக்க பேசுப்பொருளாக மாறி உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks