Ayutha Pooja: செய்யும் தொழிலே தெய்வம்... களைகட்டியது ஆயுதபூஜை..! கோலாகலமாக இன்று கொண்டாடும் தமிழக மக்கள்!

Ayutha Pooja: செய்யும் தொழிலே தெய்வம்... களைகட்டியது ஆயுதபூஜை..! கோலாகலமாக இன்று கொண்டாடும் தமிழக மக்கள்!
News Image

செய்யும் தொழிலே தெய்வம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலும், வல்லமையும் அவன் செய்யும் தொழிலுக்கே உண்டு. அப்பேற்பட்ட தொழிலைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் நாள் ஆயுத பூஜை ஆகும்.

ஆயுத பூஜை:

வட இந்தியாவில் தசரா பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நவராத்திரியாக கொலு வைத்து கடைசி இரு நாட்கள் ஆயுத பூஜையாகவும், விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது. செய்யும் தொழிலைப் போற்றும் தினமான ஆயுத பூஜை இன்று மொத்த தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

களை கட்டிய கொண்டாட்டம்:

ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாகவே பொரி, இனிப்புகள், வாழை மரங்கள், பழங்கள் என விற்பனை அமோகமாக இருந்து வந்தது. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பெரும் நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை அனைவரும் ஆயுதபூஜையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்புகள், பொரி மற்றும் பணப்பட்டுவாடாவுடன் மகிழ்வித்து அவர்களை ஊக்குவிப்பது வழக்கம். சில நிறுவனங்கள் வெகு விமர்சையாக ஆயுத பூஜையை ஆடல், பாடல்  என கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

வீடுகளிலும் பூஜை:

ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகளிலும் சிறப்பு தரிசனம் செய்வது வழக்கம் என்பதால் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வாழை இலையில் வைத்து படையலிட்டு சாமி தரிசனம் செய்ய மக்கள் தயாராகிவிட்டனர். இதற்காக நேற்று முன்தினம் முதல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் , மாவிலை தோரணம் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி அதற்கும் பூஜை செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்திற்காக வெளியூரில் வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கோயில்களிலும் வழிபாடு:

ஆயுதபூஜை தினமான இன்று செய்யும் தொழில் மட்டுமின்றி கல்விக்கும் உகந்த நாளாகவே கருதப்படுகிறது. இதனால், சரஸ்வதி பூஜை காெண்டாட்டமும் இன்று காணப்படுகிறது. வீடுகளில் தங்களது வாழ்வாதாரத்திற்கான கருவிகள் வைத்து சாமி தரிசனம் செய்வது மட்டுமின்றி புத்தகங்கள், நோட்டுகள், பேனா என பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் வைத்தும் வழிபடுவது வழக்கம் ஆகும்.

ஆயுதபூஜையை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற தமிழ்நாட்டின் பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks