பணத்தை எப்போதும் மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் வீணா போகாது என்பார்கள். இவை இரண்டுமே நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை எதிர்கொண்டு சிறந்த லாபத்தை வழங்கக்கூடியவை. அதற்கு ஏற்றார் போல தங்கம் விலையும், காலி மனைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டிலும் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பெண்கள் அதிகளவிலேயே தங்கத்தை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

புதிய உச்சத்தில் தங்கம்

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியதில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இன்று சவரன் எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: AIADMK: அதிமுகவில் 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய ரெடியா இருக்காங்க... இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் செங்கோட்டையன்

நேற்று ரூ.1280 குறைந்த தங்கம்

நேற்று வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை இரண்டு முறை தங்கம் குறைந்தது. காலையில் சவரனுக்கு 320 ரூபாயும், மாலை நேரத்தில் 960 ரூபாயும் சரிந்தது. அதாவது ஒரு கிராம் ரூ.13,720க்கும், ஒரு சவரன் ரூ.1,09,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் நிலவரம்

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,09,480ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,685ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,929ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.119,432ஆக விற்பனையாகிறது. நகை விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் நகைக்கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஒரு கிராம் விலை ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.245,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article