சிவகங்கை பெண்களுக்கு வேலை: ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சிவகங்கை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வருகின்ற 06.11.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், தகவல்.

பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.18,800- வழங்கப்படும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூகநல அலுவலகத்தில், பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான இந்திய அரசின் சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) செயல்பட்டு வருகிறது. வழக்கு பணியாளர் (Case Worker)...," இம்மையத்தில், காலிப்பணியிடமாகவுள்ள 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிட பெண் விண்ணப்பதார்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர் சட்டம், சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் கல்வித் தகுதியினை பெற்றிருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு சாரா திட்டம் / திட்டப்பணிகளில் பெண்கள் தொடர்பான துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்தவராகவும், சுழற்சி முறையில் (24x7) பணிபுரிபவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக வயது வரம்பு இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.18,800- வழங்கப்படும்.

சுயவிபரங்கள்

எனவே, தகுதியுடைய நபர்கள் தங்களது சுயவிபரங்களை வருகின்ற 06.11.2026 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை மாவட்டம் – 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைத்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article