விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 50,000 புதிய மின் இணைப்புகள்.. யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
News Image

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது  எரிசக்தித்துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. அப்போது எரிசக்தித் துறைக்கான 17 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவித்திருந்தார். குறிப்பாக 2026-2027-ம் ஆண்டில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். நீட்டிப்பு அல்லது மேம்பாட்டு பணி தேவையில்லாத ஒருமுனை வீட்டு மின் இணைப்புகள், கள ஆய்வின்றி சுய-உறுதிமொழி அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மின் இணைப்பு பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

அரசாணை வெளியீடு

இந்நிலையில் விவசாயிகளுக்கு புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மின் இணைப்புக்கான ரூ.127.56 கோடி கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு இணைப்புக்கு சராசரியாக 6.5 குதிரைத்திறன் கணக்கில், குதிரைத்திறன் ஒன்றுக்கு ஆண்டிற்கு ரூ. 3,925 வீதம் கணக்கிடப்பட்டு, இந்த முழுத் தொகையையும் அரசே மானியமாக மின் பகிர்மானக் கழகத்திற்கு நேரடியாக வழங்கும்.

இதையும் படிங்க: அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!

அதேபோல், ஒரு புதிய விவசாய மின் இணைப்பை ஏற்படுத்த தோராயமாக ரூ.1.5 லட்சம் செலவாகும் நிலையில், மொத்தமுள்ள 50,000 இணைப்புகளுக்கான இந்த ரூ.750 கோடி செலவை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகமே முழுமையாக ஏற்கவுள்ளது.

50,000 இணைப்பு யார் யாருக்கு?

* சாதாரணப் பிரிவு (இலவசம்):

பொதுவான காத்திருப்போர் பட்டியலில் இருந்து சுமார் 16,785 விவசாயிகளுக்கு இந்த முறையில் முற்றிலும் இலவசமாக மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

* பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) சிறப்பு ஒதுக்கீடு:

இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க ஒரு சிறப்பு நடவடிக்கையாக முதல்முறையாக 3,215 புதிய இலவச மின் இணைப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* சுயநிதித் திட்டம் (RSFS - கட்டண முறை)

ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்காக ரூ. 10,000 கட்டணத்தில் 21 இணைப்புகளும், ரூ. 25,000 கட்டணத்தில் 880 இணைப்புகளும், ரூ.50,000 கட்டணத்தில் 2,471 இணைப்புகளும் என மொத்தம் 3,372 இணைப்புகள் தயார் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: நீலகிரிக்கு ரெட் அலர்ட்... கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!

*  அரசு நலத்திட்டங்கள் (கட்டண முறை)

பல்வேறு அரசு துறைகளின் கீழ் 1,346 இணைப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு முன்னுரிமைப் பிரிவுக்கு 350 இணைப்புகளும், தாட்கோ திட்டத்தின் கீழ் 99 இணைப்புகளும், நீர்வள பாதுகாப்பு மற்றும் பாசன மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 247 இணைப்புகளும், புதிய திட்டங்களுக்கு 300 இணைப்புகளும் மற்றும் அரசு விதை பண்ணைகள் அடங்கும்.

* தட்கல் விரைவு சுயநிதித் திட்டம்

கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெறத் தயாராக காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதிகபட்சமாக 25,282 இணைப்புகள் விரைவு தட்கல் முறையில் வழங்கப்பட உள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks