மாத பட்ஜெட்டுக்கு மரண அடி... அரிசி விலை தாறுமாறு! தீபாவளிக்குள் காத்திருக்கும் அடுத்த ‘ஷாக்’

மாத பட்ஜெட்டுக்கு மரண அடி... அரிசி விலை தாறுமாறு! தீபாவளிக்குள் காத்திருக்கும் அடுத்த ‘ஷாக்’
News Image

தஞ்சாவூர்: மாதாமாதம் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் வேட்டு வைக்கும் விதமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டே செல்கிறது. தீபாவளிக்குள் இன்னும் விலை உயரும் என்ற தகவல் மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

தமிழக மக்களின் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள அரிசியின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக பொன்னி உள்ளிட்ட சன்ன ரக அரிசிகளின் விலை கிலோ கணக்கில் கணிசமாக அதிகரித்துள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாதாந்திர அரிசி செலவில் மேலும் உயர்ந்துள்ளது. தீபாவளிக்குள் இன்னும் விலை உயரும் என்ற தகவல் நடுத்தர மக்களின் வயிற்றில்

கடந்த செப்டம்பர் மாத சந்தை நிலவரத்துடன் ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தில் அரிசி விலை உயர்வு வேகம் பெற்றுள்ளது. செப்டம்பர் இறுதியில் தஞ்சாவூரில் கர்நாடக பொன்னி அரிசி கிலோ முதல் ரகம் ரூ.65-ல் இருந்து ரூ.78 ஆக உயர்ந்திருந்தது. அதாவது கிலோவுக்கு ரூ.13 உயர்வு ஏற்பட்டது. இரண்டாம் ரகம் 60லிருந்து ரூ.65 முதல் ரூ.75 வரை விலை உயர்ந்துள்ளது. அதேபோல் மணச்சநல்லூர் பொன்னி சன்ன ரகம் ரூ.60லிருந்து ரூ.70 ஆகவும், சற்றே மோட்டா ரகம் ரூ.60-ல் இருந்து ரூ.68 ஆகவும் உயர்ந்தது.

பொன்னி அரிசி: செப்டம்பர் தொடக்க நிலவரம் – ரூ.65; செப்டம்பர் இறுதி நிலவரம் – ரூ.78. கிலோவுக்கு ரூ.13 உயர்வு.

மணச்சநல்லூர் பொன்னி: செப்டம்பர் தொடக்க நிலவரம் – ரூ.60; செப்டம்பர் இறுதியில் – ரூ.68. கிலோவுக்கு ரூ.8 உயர்வு.

உயர்தர பொன்னி: செப்டம்பர் காலகட்டத்தில் ரூ.65-க்கு விற்ற நிலையில், பின்னர் ரூ.75 வரை சென்றுள்ளது. இதன் விலை இந்தவாரத்தில் மீண்டும் உயரும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

சீரகசம்பா பிரியாணி அரிசி விலை கடந்த மாதம் ரூ.95 விற்ற நிலையில் தற்போது ரூ.100க்கு விற்பனையாகிறது.

இதற்கிடையே அக்டோபர் 7-ம் தேதி வெளியாகியுள்ள மொத்த சந்தை தகவலில், பொதுவாக பயன்படுத்தப்படும் நுண்ணிய ரக அரிசிகளின் விலை கிலோ ரூ.70-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பாஸ்மதி அரிசி ரகத்திற்கு தகுந்தார் போல் கிலோவிற்கு ரூ.100 விற்றது ரூ.105க்கும், ரூ.105 விற்றது ரூ.110க்கும் விலை உயர்ந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரகத்திற்கு தகுந்தார்போல் ரூ.5 உயர்ந்து விற்பனையாகிறது.

மேலும், செப்டம்பர் 28-ம் தேதி மைசூர் பொன்னி மற்றும் ஆந்திரா பொன்னி ஆகியவற்றின் விலை ரூ.50-ல் இருந்து ரூ.65-க்கும், பின்னர் ரூ.85 வரையும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா ஃபைன் அரிசி ரூ.55-ல் இருந்து ரூ.90–95 வரையும், இட்லி அரிசி ரூ.43-ல் இருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது.

இன்று அக்டோபர் 7-ம் தேதி விற்பனை விலை கடந்த ஓரிரு மாதங்களில் 25 முதல் 30 கிலோ அரிசி மூட்டைகளின் விலை ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீலக்ஸ் பொன்னி ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், பொன்னி ரூ.1,600-ல் இருந்து ரூ.1,950 ஆகவும், வெள்ளை பொன்னி ரூ.1,900-ல் இருந்து ரூ.2,300 ஆகவும் உயர்ந்துள்ளது. இட்லி அரிசி ரூ.900-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், பச்சரிசி ரூ.1,500-ல் இருந்து ரூ.1,800 ஆகவும் உயர்ந்துள்ளது. 30 கிலோ பாஸ்மதி ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தமிழகத்தில் சன்ன ரக நெல்லின் உற்பத்தி போதுமான அளவில் இல்லாத நிலையில், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் வரத்து முக்கியமானதாக உள்ளது. அந்த மாநிலங்களிலும் உற்பத்தி மற்றும் வரத்து குறைந்திருப்பதால் தமிழக அரிசி ஆலைகளுக்கு கிடைக்கும் நெல் அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தமிழக டெல்டா மாவட்டங்களில் மழை பற்றாக்குறை மற்றும் சாகுபடி பாதிப்பும் அரிசி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை கால தேவை அதிகரித்துள்ளதும் விலையை மேலும் உயர்த்தும் காரணியாக அமைந்துள்ளது.

தீபாவளிக்கு முன் ரூ.100?

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் வியாபாரிகள் தரப்பில், நெல் வரத்து மேலும் குறைந்தால் தீபாவளிக்கு முன்பு சில சன்ன ரக அரிசிகளின் விலை கிலோ ரூ.100-ஐ தொடும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்தடுத்த வாரங்களில் புதிய நெல் வரத்து அதிகரிக்குமா, வெளிமாநிலங்களில் இருந்து நெல் வரத்து சீராகுமா என்பதுதான் அரிசி விலையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும். அதுவரை, குடும்ப அட்டையில் அரிசி வாங்குவது முதல் மளிகைக் கடையில் கிலோ கணக்கில் அரிசி வாங்குவது வரை, பொதுமக்களின் சமையல் பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாகியுள்ளது. தீபாவளி நேரத்தில் இந்த விலை உயர்வு நடுத்தர மக்களின் குரல்வளையை நசுக்குவது போன்று மாறிவருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks