மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
News Image

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே மாணவர்களின் திறமை கண்டறியப்படும். அந்த வகையில்  8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வானது முக்கியமானது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாணவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறது.

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

குறிப்பாக விஷேச நாட்கள், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள். இதனால் மாணவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் இயக்குநர்

இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில்: தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளிலும் (மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, நர்சரி / மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள்) ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு அரசு பொது விடுமுறை நாட்கள் அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகள், சிறப்பு வகுப்புகளும் நேரடியாகவோ, இணையவழி மூலமாகவோ நடத்தக்கூடாது  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இந்த அறிவுரைகளை மீறி எவ்வித பள்ளியும் செயல்படக்கூடாது. அவ்வாறு விதிகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் விதிகள், 2023-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 'அரசு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளியில் விடுமுறை அறிவித்தவுடன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. ஆனால் அதனை மீறி தனியார் பள்ளியில் தொடர்ந்து வகுப்புகள் நடத்துவதால், மாணவர்களும் பெற்றோர்களும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அமைச்சர் அலுவலகத்தின் அறிவுரை அடிப்படையில் பள்ளிகளில் கட்டாயம் விடுமுறை விட வேண்டும்.  மாணவர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks