5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!

5 நிமிடத்தில் கடன் கிடைக்குமா? நம்பி ஏமாறாதீங்க! புதுச்சேரி போலீசார் முக்கிய எச்சரிக்கை!
News Image

புதுச்சேரி: ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாகப் பரப்பப்படும் போலியான உடனடி கடன் செயலிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த ஆவணங்களுடன் சில நிமிடங்களில் கடன் வழங்குவதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதுடன், ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் சம்பவங்களும் நடைபெறுவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உடனடி கடன் ஆசை காட்டி மோசடி

அவசரப் பணத் தேவையில் இருப்பவர்களைக் குறிவைத்து, குறைந்த ஆவணங்களுடன் உடனடியாகக் கடன் வழங்குவதாகக் கூறும் போலியான கடன் செயலிகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயலிகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பது மட்டுமின்றி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி மிரட்டும் செயல்களும் நடைபெறுகின்றன.

கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, அவற்றை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதனால், பணத்தை இழப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

ரிசர்வ் வங்கி விதிமுறைகளைச் சரிபார்க்க வேண்டும்

கடன் வழங்கும் செயலிகள், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்ட வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மூலமாகச் செயல்பட வேண்டும்.

எனவே, கடன் பெறுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் கடன் வழங்கும் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையைப் பொதுமக்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rbi.org.in மூலம் தொடர்புடைய விவரங்களைச் சரிபார்க்கலாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு செயலி இடம்பெற்றிருப்பதால் மட்டுமே அது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது என்று கருதிவிடக் கூடாது. செயலியின் பின்னணியில் உள்ள நிறுவனம், அதன் சட்டப்பூர்வ நிலை மற்றும் கடன் வழங்கும் நடைமுறைகள் குறித்து தனியாகச் சரிபார்ப்பது அவசியம் எனச் சைபர் குற்றப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ்அப், டெலிகிராம் இணைப்புகள் மூலம் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!

வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் அறிமுகமில்லாத இணைப்புகள் மூலம் கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, ஏ.பி.கே. (APK) கோப்புகளாக அனுப்பப்படும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து நிறுவுவது ஆபத்தானது. இதுபோன்ற செயலிகள் மூலம் மொபைல்போனில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மொபைல்போனில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அணுக அனுமதி கேட்கும் கடன் செயலிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் வழங்குவதற்குத் தேவையற்ற தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க முயலும் செயலிகளுக்கு அனுமதி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் வங்கிக் கணக்கும் முடக்கப்படலாம்!

போலி கடன் செயலிகள் தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பொதுமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில மோசடிக்காரர்கள், வேறு நபர்களிடம் மோசடி செய்து பெற்ற பணத்தை, கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பக்கூடும். இதனால், கடன் பெற்றவர் அந்தப் பணம் சைபர் மோசடியுடன் தொடர்புடையது என்பதை அறியாமல் இருக்கலாம்.

பின்னர் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையில் புகார் அளிக்கும்போது, பணம் சென்றடைந்த வங்கிக் கணக்கும் மோசடிப் பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். அதன் காரணமாக, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் அபாயமும் உள்ளது.

எனவே, கடன் வழங்குவதாகக் கூறும் நிறுவனங்களிடமிருந்து பணம் பெறும்போது, பணம் அனுப்பும் நிறுவனம் மற்றும் பரிவர்த்தனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'5 நிமிடத்தில் கடன்', 'சிபில் சோதனை இல்லை' – விளம்பரங்களை நம்பாதீர்கள்!

'5 நிமிடங்களில் கடன்', 'சிபில் மதிப்பெண் தேவையில்லை', 'குறைந்த ஆவணங்கள் போதும்' போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி உடனடியாகச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனச் சைபர் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது.

அவசரப் பணத் தேவையைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பொதுமக்களைத் தங்கள் வலையில் சிக்க வைக்கலாம். எனவே, கடன் பெறுவதற்கு முன்பாக நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், கடன் விதிமுறைகள், வட்டி, கட்டணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கையாளப்படும் விதம் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மிரட்டலுக்கு ஆளானால் கூடுதல் பணம் செலுத்த வேண்டாம்!

ஏற்கெனவே போலியான கடன் செயலிகளில் சிக்கி, பணம் பறிப்பு அல்லது மிரட்டலுக்கு ஆளானவர்கள் அச்சத்தின் காரணமாக மீண்டும் மீண்டும் பணம் செலுத்த வேண்டாம் எனக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

மோசடிக்காரர்கள் அனுப்பும் மிரட்டல் குறுஞ்செய்திகள், அழைப்பு விவரங்கள், பணப் பரிவர்த்தனை ரசீதுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆதாரங்கள் விசாரணைக்கு உதவும் என்பதால், அவற்றை முறையாகச் சேகரித்து உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிப்பதில் தாமதம் செய்யாமல், பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

சைபர் மோசடியில் சிக்கினால் புகார் அளிப்பது எப்படி?

போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழந்தாலோ, தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டப்பட்டாலோ, பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிகளில் புகார் அளிக்கலாம்:

தேசிய சைபர் குற்ற உதவி எண்: 1930

ஆன்லைன் புகார் இணையதளம்: www.cybercrime.gov.in

அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது சைபர் குற்றக் காவல் நிலையத்தை அணுகியும் புகார் அளிக்கலாம். சைபர் மோசடி மூலம் பணத்தை இழந்திருந்தால், பரிவர்த்தனை விவரங்களுடன் விரைவாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்வது முக்கியம்.

கடன் பெறுவதற்கு முன்பாக நிதி நிறுவனத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும். உடனடி கடன் என்ற கவர்ச்சியில் ஏமாறாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். பணத் தேவைக்காகத் தங்களது தனியுரிமையையும் நிதிப் பாதுகாப்பையும் இழக்க வேண்டாம் எனப் புதுச்சேரி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks