மீண்டும் தீவிரமடையும் ரஷ்யா - உக்ரைன் போர்!

2.1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 500 பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.பல ஆண்டுகளாக நீடித்துவரும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் இராணுவ வீரர்களும், அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உக்ரைனின் டினிப்ரோ ரயில் நிலையம் மீது ரஷிய படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்க்கொண்டு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் பணியில் உக்ரைன் இறங்கியுள்ளது.

ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல்

ரஷ்யாவை எதிர்க்கொள்ளும் வகையில் 500 பேட்ரியாட் ஏவுகணைகளை பெற உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து டீசலை கொள்முதல் செய்ய சமீபத்தில் அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. இது தொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் இடையே கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் அந்நாட்டுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்நிலையில் ரஷ்யாவுடன் மோதலை கடைபிடித்து வந்த அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்தே டீசலை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதோடு, உக்ரைனுக்கும் ஏவுகணைகளை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆயுதங்களை பெற தீவிரம் காட்டும் உக்ரைன்!

அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பொருளாதார உதவியுடன் தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்களை உக்ரைன் பெற்றுவரும் நிலையில், அமெரிக்காவிடமிருந்து ஏவுகணைகளை பெற தீவிரம் காட்டி வருகிறது. ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகளை வழங்க சில காலம் எடுக்கும் எனவும் முழுமையாக வழங்க சில ஆண்டுகளாகும் என கூறப்படுகிறது.

Source: Read Full Article