ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர் விடுமுறைகள், பண்டிகை, முகூர்த்த நாட்கள், வார கடைசி நாட்களில் பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கு ஏதுவாக செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், எந்தெந்த மாவட்டங்களுக்கு எங்கிருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரங்களை பயணிகள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

சிஎம்டிஏ காலனி பூங்க அருகே கிளாம்பாக்கம்

வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்

கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் செல்வதற்கு 45 இலவசர மாநகர பேருந்துகள் பயன்படுத்தட உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

கிழக்கு கடற்கரைச் சாலை, வேலூர், பெங்களூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மாதவரம் பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்

Source: Read Full Article