"போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த ரவுடி கொலை " இன்ஸ்டாவில் பதிவிட்ட கொலையாளிகள்

"போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த ரவுடி கொலை " இன்ஸ்டாவில் பதிவிட்ட கொலையாளிகள்
News Image

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் - சரமாரி அரிவாள் வெட்டு

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் மைத்ரேயன் (வயது 21). இன்று காலை 10 மணயளவில் தந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் , திடீரென ஆட்டோவில் வந்த மைத்ரேயனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

பட்டப் பகலில் இளைஞர்கள் 3 பேரும் சேர்ந்து கொன்று விட்டு தப்பி செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத் தளத்தில் வெளியாகின. இதற்கிடையே இன்று மாலை சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஜீவா, அசாருதீன் ஆகிய இரண்டு பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. கொலையான மைத்ரேயன் ரவுடி என்பதும் , சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்துள்ளது.

"கையெழுத்து போட வந்த இளைஞர்"

கைதான ஜீவாவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு கும்பல் வெட்டியுள்ளது. இந்த வழக்கில் மைத்ரேயனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் இருவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே அவர் வேறு வழக்கில் சிறை சென்று விட்டதால் காத்திருந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைத்ரேயன் கடந்த 21 ஆம் தேதி தான் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து தினமும் காலை 10.30 மணியளவில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு வந்துள்ளார். மயிலாப்பூரில் சக ரவுடிகளுடன் பிரச்சினை இருந்து வந்துள்ளதால் இவர் திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தபடி மயிலாப்பூர் காவல் நிலையம் வந்து சென்றுள்ளார்.

இன்று காலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு சென்ற போது தான் இந்த கொலையை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks