சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. அர்னாப் புயலின் தாக்கம் காரணமாக பரவலாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 24 அடி கொள்ளளவை கொண்ட அணையின் நீர்மட்டம் சுமார் 15 அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து 150 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து மொத்தமாக 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் ஆய்வு

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையின் குடிநீர் தேவைக்கு இன்றியமையாததான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அணையின் நீர்வரத்து, நீர்மட்டம் மற்றும் நீர்வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சாலையில் நடந்து மக்களை சந்தித்த முதல்வர்

ஆய்வு முடிந்து செல்லும் வழியில் திரளானோர் திரண்டிருந்ததை கண்டு, காரிலிருந்து இறங்கிய முதல்வர் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் ஆரவாரமிட்டு முதலமைச்சரை வரவேற்றனர்.

Source: Read Full Article