தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக திமுக செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கடந்த ஜூன் மாதம் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பி.டி.அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஸ் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய இந்த சோதனையில் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், அன்பில் மகேஸ் உறவினர் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அன்பில் மகேஸ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

காலையில் முன்ஜாமீன் ரத்து

இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாலையில் சென்னையில் கைது

இந்த நிலையில், சென்னை அமைந்தகரையில் வைத்து அன்பில் மகேஸை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை அங்கிருந்து காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், சிரித்தவாரே செல்கிறார்.

Anbil Mahesh Arrest Video | அன்பில் மகேஷ் அதிரடி கைதுவெளியான கைது வீடியோ I https://t.co/LRXU10pMDY #anbilmahesh #anbilmahesharrest #tnpolice #abpnadu https://t.co/pMzrBnUq0R

— ABP Nadu (@abpnadu) October 26, 2026

2021 முதல் 26 வரை திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நின்று தோல்வியுற்றார். இவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும் ஆவார். திமுக ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கும் என்று திமுகவினர் இடையே நிலவி வருகிறது.

Source: Read Full Article