செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
News Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். ஏரியில் நீர் திறக்கும் முன் உரிய அறிவிப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (26.10.2026), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஏரியின் தற்போதைய நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம் மற்றும் வெள்ளத் தாங்கு இருப்பு குறித்து நீர்வளத்துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இன்று (26.10.2026) காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் முழு நீர்மட்டமான 24.00 அடியில், தற்போது நீர்மட்டம் 14.76 அடியாகவும், மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 1,488 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் சுமார் 41 சதவீதமாகும். நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 208 கன அடியாகவும் உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டபோது, ஏரியின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவை 24 மணி நேரமும் இடைவிடாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், கட்டுப்பாட்டு அறைகள் முழு எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மதகுநீர்த் திறப்புகள், தூக்கும் அமைப்புகள், மின்னாற்றல் மற்றும் மாற்று மின்னாற்றல் வசதிகள், தொலைத்தொடர்பு இணைப்புகள் ஆகியவை முழு செயல்பாட்டுத் தயார்நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும், உபரி நீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில், அது படிப்படியாகவும், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அடையாறு ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள சென்னை மாநகரின் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் நீர் வெளியேற்றம் திட்டமிடப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நீர் திறப்பதற்கு முன்னதாக, கீழ்ப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே உரிய அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், வருவாய்த்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துடன் முழு ஒருங்கிணைப்பு பேணப்பட வேண்டும் என்றும், பருவமழைக்காலம் முழுவதும் தொகுப்பேட்டில் வரையறுக்கப்பட்ட நீர்மட்டங்களுக்கேற்ப அணை இயக்கப்பட்டு, வெள்ளத் தாங்கு இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதேநேரத்தில் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்கான இருப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks