"முகம் கேவலமா இருக்கு" கேலி செய்த சக தொழிலாளியை கொடூரமாக தீர்த்துக் கட்டிய நபரால் பரபரப்பு

"முகம் கேவலமா இருக்கு" கேலி செய்த சக தொழிலாளியை கொடூரமாக தீர்த்துக் கட்டிய நபரால் பரபரப்பு
News Image

"கோடாரியால் வெட்டி கொலை"

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டியின் மகன் காளிராஜ் ( வயது 42 ). இவர் திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

அதே சந்தையில் , அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பனின் மகனான 40 வயதுடைய சின்னத்துரை என்பவரும் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தினசரி சந்தையில் உள்ள காய்கறிக் கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னத்துரை, கோடரியால் காளிராஜை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் , அவர் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் , கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உயிரிழந்த காளிராஜின் உடலை மீட்டு , உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

"உன் முகம் கேவலமா இருக்கு பாக்க முடியல"

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் சரணடைந்த சின்னத்துரையிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காளிராஜ் சின்னத்துரையை பார்க்கும் போது "உன் முகம் கேவலமா இருக்கு பாக்க முடியல" என கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

வழக்கம் போல கடந்த சனிக்கிழமை சுமை தூக்கும் வேலைக்கு வந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, காளிராஜ் சின்னத்துரையை கேலி செய்து கீழே தள்ளித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தினசரி சந்தையில் மற்றவர்கள் முன்னிலையில் தன்னைத் தாக்கியதை அவமானமாகக் கருதிய சின்னத்துரை, ஆத்திரத்தில் காளிராஜைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும் , உருவக் கேலி மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட காளிராஜுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவரது மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்நிலையில் , காளிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாகத் தொடங்கியதாகக் கூறப்படும் கேலி , வாக்குவாதம் மற்றும் முன் விரோதம் கொலையில் முடிந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks