“இனி மதுவே வேண்டாம்!” தமிழகம் முழுவதும் புதிய இயக்கம் தொடங்கிய சௌமியா அன்புமணி

“இனி மதுவே வேண்டாம்!” தமிழகம் முழுவதும் புதிய இயக்கம் தொடங்கிய சௌமியா அன்புமணி
News Image

சென்னை: மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் சமூக, குடும்ப மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், “மது இல்லாத தமிழகம்” (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்கத்தை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப்பேரவை குழுத் தலைவருமான சௌமியா அன்புமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.

“மது இல்லாத தமிழகம்”

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தமிழ்நாட்டில் மதுவையும், அதனால் ஏற்படும் சமூகத் தீமைகளையும் ஒழிக்கும் நோக்கில், “மது இல்லாத் தமிழகம்” (Alcohol Free Tamil Nadu) என்ற புதிய இயக்க தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, மதுவிலக்கை வலியுறுத்தி, மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் தழுவி நடைபெற உள்ள இந்தப் பயணத்தை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சௌமியா அன்புமணி, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி, மது இல்லை என்றால் தமிழகத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் காக்கப்படும். தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேடிப் பார்த்தால், மதுப் பழக்கம் இல்லாத வீடு இருக்காது என்ற நிலையே இன்று உள்ளது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் இல்லாத குடும்பங்களே இல்லை எனலாம்.

இந்த மேடையில் உள்ளவர்கள் மது ஒழிப்பிற்காக வழக்குகளைச் சந்தித்தவர்கள்; குறிப்பாக, மதுக்கடைக்குப் பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டு 15 நாட்கள் வரை சிறைசென்றவர்கள்.
காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, மது ஒழிப்பிற்காகத் தடியடியும் வாங்கியுள்ளனர். 'மதுவை ஒழிக்க வேண்டும்' என்ற ஒற்றைக் கொள்கைக்காக மட்டுமே இவர்கள் சிறை சென்றுள்ளனர். அன்று மது ஒழிப்பு குறித்து அரசுக்கு எதிராகத் தொடர் ஆர்ப்பாட்டங்கள் செய்த காரணத்தினால்தான், மக்கள் தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது. இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. ஏற்கெனவே இரண்டு தலைமுறையினர் மதுவிற்கு அடிமையாகிவிட்டனர்; இனி வரும் மூன்றாம் தலைமுறையினரையாவது நாம் காப்பாற்ற வேண்டும் .

1937ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கு அமல்பத்தப்பட்டது; ஆனால், 1971இல் அது ரத்து செய்யப்பட்டது. அதன் பின்பு மக்கள் மதுவிற்கு அடிமையாகி, குடி நோயாளிகளாக மாறிவிட்டனர். எனவே, வரும் மூன்றாவது தலைமுறையையாவது நாம் முற்றிலுமாக காப்பாற்ற வேண்டும். இந்தப் பிரச்சார இயக்கத்தின்முக்கிய நோக்கமே இதுதான். பெண்கள் எந்தவிதக் கடன் சுமையும் இல்லாமல் வாழ வேண்டும், குடும்ப வன்முறைகள் ஒழிய வேண்டும், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், பெண்கள் நிம்மதியாகவும், குழந்தைகளின் நல்வாழ்வுடனும் வாழ வேண்டும்.இதற்குத் தமிழகத்திலிருந்து மது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலகளவில் மக்கள் அதிகமாக இறப்பது புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களால்தான் என்பார்கள். ஆனால், அதையெல்லாம்விட அதிகமாக, ஆண்டுதோறும் உலக முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மதுவினால் உயிரிழக்கின்றனர்; போர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இது மிக அதிகம் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி,

தமிழ்நாடு முழுவதும் மது நிறைந்துள்ளது. மது ஒழிப்புக் கொள்கை கொண்டு வந்து அதற்கான செயல்திட்டத்தை வகுத்து படிப்படியாக மது பயன்பாட்டை குறைப்பது, மாவட்டந்தோறும் குடி மறுவாழ்வு மையங்கள் கொண்டு வருவது, மதுக்கடைகள் திறந்து வைக்கும் நேரத்தை குறைப்பது, கடைகளுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்க கூடாது.

மாணவர்களிடம் இந்தப் பழக்கம் இருப்பது அதிர்ச்சியாக இருப்பதோடு, மாணவர்களுக்கு எளிதாக மதுபானங்கள் கிடைக்கிறது. பள்ளி கல்லூரிகள் அருகேயே மாணவர்களுக்கு மதுபானங்கள் கிடைப்பது. அத்தகைய கடைகளை மூட வேண்டும். ஆசிரியர்கள் அதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இந்தியாவிலேயே இரண்டு பெரிய மாநிலங்களில் மதுவிலக்கு கொள்கை உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு என்பது ஒரு தாயாக நான் நினைக்கிறேன். மது ஒழிப்பு என்பது சாத்தியம் இல்லாத ஒன்று இல்லை. மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே இலக்காக உள்ளது.

அதிகமான மதுப்பழக்கம் ஆண்களிடம் உள்ளது. பெண்கள் மது அருந்துவது என்பது மட்டுமே அதிகளவில் காட்டப்படுகிறது. குடிப்பழக்கத்தில் பெண்கள், ஆண்கள் என. வேறுபாடு இல்லை. இரு பாலருக்கும் குடிப்பழக்கம் என்பது நிறுத்த வேண்டும் என்பதுதான் பாமகவின் திட்டம்.

ஆல்கஹால் என்பது போதை கொடுக்கும் ஒரு வஸ்து. ஆல்கஹால் என்பது உயர்ரக மதுரகம், சாதாரண மதுரகம் என இல்லாமல், கள்ளும் ஆல்கஹால்தான் எனவே ஆல்கஹால் எதுவும் தமிழ்நாட்டில் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை.

போதைக்கான ஆல்கஹாலை அரசே விற்கிறது என்பதால் மட்டுமே மது ஒழிப்பை மேற்கொள்ள வேண்டும். முறையான வருமானத்தை ஈட்டினால் டாஸ்மாக் விற்பனையின் வருமானம் தேவையற்றது. கள்ளச்சாராயம், போதை பொருட்களை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

வேலையில்லாத திண்டாட்டமும், மது எளிதில் கிடைக்கும் வசதிதான் மதுப்பழக்கம் அதிகரிக்க காரணமும். மது வாங்க ஆள் இல்லையென்றால, மது தயாரிப்புக்கான தேவை இல்லாத போது மதுபான ஆலைகளிடமும் தேவை இல்லை. மதுபான ஆலைகளுக்கு எதிரான போராட்டம்தான் பாமகவின் இலக்கு என்றார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks