அண்ணா எப்படி இருக்கிறார் கேட்டார்கள்? , விஜய்க்காக அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் - ஜேசிடி பிரபாகர்

அண்ணா எப்படி இருக்கிறார் கேட்டார்கள்? , விஜய்க்காக அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் - ஜேசிடி பிரபாகர்
News Image

தமிழ்நாட்டுக்கு புதுயுகம் பிறந்துள்ளதாகவும் எந்த கட்சியில் இருந்தாலும் நல்லது நடக்க வேண்டும் என எதிர்கால சந்ததி விரும்புவதாகவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தவெக சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நலதிட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

அப்போது பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தமிழ்நாட்டுக்கு இப்போது புதுயுகம் பிறந்துள்ளது, புதிய ஆட்சி என்று கூட சொல்ல மாட்டேன், புதுயுகமே பிறந்திருக்கிறது எனவும், தேர்தல் நேரத்தில் இந்த கட்சிக்கு ஓட்டு போடலாமா அந்த கட்சி போட்டு போடலாமா என இருந்த நிலையில் இந்த கட்சி அந்த கட்சி வேண்டாம் புதியதாக ஒருவருக்கு போடுவோம், அவர் புண்ணியவனாகவும் நல்லவனாகவும் இருப்பார் என நமது முதல்வர் ஜோசப் விஜய் தான் வரவேண்டும் என்று வாக்களித்தார்கள் எனவும்,

ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று அப்போது தான் அறிமுகம் செய்து கொள்ளும்போது நான் ஜேசிபி பிரபாகரன், வில்லிவாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து எம்ஜிஆர் காலத்தில் எம்எல்ஏவாக இருந்தேன், பொன்னேரி உட்பட 17 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக இருந்தேன் எனக் கூறிய போது அதெல்லாம் வேண்டாம் நீங்கள் விசில் சின்னத்தில் இருக்கிறீர்களா அது போதும் என மக்கள் கூறினார்கள் எனவும்,

அண்ணாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்

மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் கூட 50 ஆண்டு காலமாக நீங்கள் இருந்தீர்கள், விசிலுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று தங்களுடைய பேரன் கூறியதாகவும் இல்லை என்றால் வீட்டை பூட்டி விடுவேன் என கூறியதாகவும் தெரிவித்தார். எந்த கட்சியில் இருந்தாலும் நல்லது நடக்க வேண்டும் என எதிர்கால சந்ததி விரும்புகிறது எனவும் இந்த நிகழ்ச்சிக்கு காரில் வரும் போது கூட சில இளைஞர்கள் காரை மடக்கி, தமக்கு  வணக்கம் சொல்கிறார்கள் என நினைத்தபோது அண்ணா எப்படி இருக்கிறார், அண்ணாவை கேட்டதாக சொல்லுங்கள் என்று கேட்டார்கள், அண்ணாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்  என கூறினார்கள் எனவும்,

அன்பு தளபதி விஜய் மீது வைத்துள்ள பாசத்தை நான் பார்த்தேன் எனவும், எந்த இடத்திற்கு சென்றாலும் ஜாதி, மதம், இனம், மொழியைக் கடந்து தாங்கள் நேசிக்கிற ஒருவர், தாங்கள் நம்புகிற ஒருவர் நல்லது செய்வார் என மக்கள் நம்பி நம்பி அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிற காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் பார்க்கிறேன் எனவும்,

விஜய்க்காக அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும்

சட்டசபையில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக நேரலை கொடுக்கப்பட்டு அந்த முறை இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது எனவும், முதல்வர் பொறுப்பேற்ற உடன் சட்டசபையில்  ஒன்றை சொன்னார், சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு நல்ல ஆட்சி லஞ்ச லாவண்யம் இல்லாத ஊழல் இல்லாத ஆட்சி என சொன்னார் எனவும், முதல்வர் பொறுப்பேற்ற உடன் லஞ்சம் வாங்க மாட்டேன், வாங்கவும் விட மாட்டேன் என கூறினார். இப்போது லஞ்ச லாவன்யம் இல்லாத ஆட்சி நடக்கிறது எனவும்,

இந்தியாவில் யாரும் செய்யாத தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கினார் எனவும் விளையும் பயிர் முளையில் தெரியும் என்பதற்கேற்ப 4 மாதங்களிலேயே திட்டங்களை தொடங்கினார் எனவும், பெண்கள் அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம் செயல்படுத்தியவர் விஜய் எனவும், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் உள்ளவர் விஜய் எனவும், எப்படி சம்பாதிக்கலாம் என்ற முதல்வர்களிடையே
என்ன கொடுக்கலாம் என்ற முதல்வர் விஜய் தான் எனவும், மீண்டும் ஒரு எம்ஜிஆரை பார்த்தேன் என முதன்முதலில் பார்த்த போது கூறினேன் எனவும், விஜய்க்காக அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks