ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா

ரூ.500 கோடி ஆடியோவால் மகாராஷ்டிர அரசியலில் பூதாகரம் - மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா
News Image

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி மனோஜ் ஜராங்கே என்பவர் நீண்டகாலமாக போராடி வருகிறார். இந்நிலையில்
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது மனோஜ் ஜராங்கேவை சரிகட்டும் நோக்கில் பாஜகவிடம் இருந்து 500 கோடி ரூபாய் ஏக்நாத் ஷிண்டே மூலமாக அவருக்கு வழங்கப்பட்டதாக ஆடியோ ஒன்று வெளியானது.

மாறி மாறி குற்றம் சாட்டும் பாஜக, சிவசேனா

இந்த ஆடியோ ஆளும் தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு ஆடியோ வெளியான விவகாரத்தில் சதி உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. துணை முதல்வரும், சிவசேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பாஜகவை சேர்ந்த ஒரு தரப்பினர் சதி வேலையில் ஈடுபட்டதாக சிவசேனாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராம்தாஸ் கடம் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக முக்கிய நிர்வாகியான பிரவீண் தாரேகர், பாஜக மீது சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது எனவும், உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு டார்கெட்டா?

யாரிடம் இருந்தும் தனக்கு பணம் வழங்கப்படவும் இல்லை, தான் பணம் வாங்கவும் இல்லையெனவும் மனோஜ் ஜராங்கே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, தன் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்படுவதாகவும், தன்மீதான குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்க முடியுமா எனவும் ஆடியோ வெளியீட்டார்களுக்கு சவால் விடுத்தார். சர்ச்சையான இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆடியோ வெளியீட்டின் மூலம் ஷிண்டேவின் அரசியலுக்கு முடிவுரை எழுதவும், ஆட்சியை கவிழ்க்கவும் வலை பின்னப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks