கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?

கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?
News Image

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் அரவை வெகுவாக குறைந்து வருகிறது. அரவையை அதிகரிக்க ஆலைக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு தரமான விதைக்கரும்புகள் மற்றும் உரம் மற்றும் இடுபொருட்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கரும்பு முக்கியமான பணப்பயிராக விளங்கி வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் இப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ளன. ஆனால், கரும்பு சாகுபடி பரப்பளவு ஆண்டுதோறும் குறைந்து வருவதால், சர்க்கரை ஆலைகளின் கரும்பு அரவையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக 2 இடங்களில் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சை அருகே குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையும், பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலையும் செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் இந்த ஆலைகளுக்கு கொண்டு வரப்பட்டு அரவை செய்யப்படுகின்றன.

குறிப்பாக அரசுக்கு சொந்தமான குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அரவை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரவைப்பருவம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கி மார்ச், ஏப்ரல் மாதம் வரை நடைபெறும்.

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கடந்த காலங்களில் அதிகளவில் கரும்புகள் அரவை செய்யப்பட்டு வந்தது. இங்கு கரும்பு அரவைத்திறன் 4.50  லட்சம் டன் ஆகும். ஆனால், தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால் கிடுகிடுவென்று குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளின் கரும்பு அரவை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் சுமார் 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் டன், 2023-ம் ஆண்டில் 1 லட்சத்து 83 ஆயிரம் டன், 2024-ம் ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் டன், 2025-ம் ஆண்டில் 1 லட்சத்து 29 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அரவைக்கு வரும் கரும்புகள் வெகுவாக குறைந்து விட்டது.

கரும்பு சாகுபடி பரப்பளவு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக சாகுபடி செலவு அதிகரிப்பு, தொழிலாளர்கள் கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு, கூலி உயர்வு, இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, அறுவடை மற்றும் போக்குவரத்து செலவு உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் இருந்து வெகுவேகமாக விலகி மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரும்பு சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமானால், விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும். தற்போது கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வரை விலை கிடைக்கும் வகையில் அரசு ஊக்கத்தொகையுடன் விலை நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும், கரும்பு சாகுபடிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். இந்த ஆண்டு அரசு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அதனை தீபாவளிக்கு முன்னதாகவே வழங்க வேண்டும்.

விதை கரும்புக்கு மானியம் வழங்குதல், கரும்பு நடவு மற்றும் அறுவடை பணிகளுக்கான செலவுக்கு உதவித்தொகை வழங்குதல், அறுவடை எந்திரங்களுக்கான வாடகை செலவை குறைக்கும் வகையில் மானியம் வழங்குதல் போன்றவற்றை அரசு செய்து கொடுத்தால் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் ஆலைக்கு வரும் கரும்பு அளவும் கூடுதலாகும். இதனால் ஆலைகளின் அரவை திறனையும் முழுமையாக பயன்படுத்த முடியும். விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும் என்பதால், கரும்பு சாகுபடியை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து தோழகிரிப்பட்டியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ஆண்டுக்கு 4.50  லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யும் திறன் உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு இந்த ஆலையில் அதிகபட்சமாக 6 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கரும்பு அரவை ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வருகிறது. தற்போது விவசாயிகள் மாற்றுப்பயிர்களை நோக்கி தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் கரும்பு சாகுபடி பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.
நடப்பு ஆண்டில் குருங்குளம் சர்க்கரை ஆலையில் 1 லட்சத்து 29 ஆயிரம் டன் மட்டுமே கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. வருகிற அரவை பருவத்தில் சுமார் 1.50  லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வதற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 40 டன் வரை கரும்பு மகசூல் கிடைக்கிறது. ஆனால் கரும்பு வெட்டுக்கூலி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செலவுகளை விவசாயிகள் ஏற்க வேண்டியுள்ளதால், அவர்களுக்கு கிடைக்கும் லாபம் மிகவும் சொற்பமாகவே உள்ளது.

இதனால் கரும்பு டன்னுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். இந்த நிலையில், அரசு தற்போது டன்னுக்கு ரூ.4,000 என்ற விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதன் மூலம் வருங்காலங்களில் விவசாயிகள் மீண்டும் கரும்பு சாகுபடியை நோக்கி வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கரை ஆலை பரப்பளவு 190 ஏக்கர் ஆகும். ஆலை இயங்கும் பகுதியை தவிர மற்ற பகுதிகளில் புதர் மண்டிக்கிடக்கிறது. கருவை மரங்கள் அதிகளவில் உள்ளது. இதை சுத்தம் செய்து 50 ஏக்கரில் ஆலை நிர்வாகமே தரமான புதிய ரக கரும்பை விதைத்து விவசாயிகளுக்கு விதை கரும்பாக வழங்கலாம். இதனால் விவசாயிகளின் செலவு மிச்சம் ஆவதுடன் மேலும் கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்ய ஏதுவாகும். மேலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் அளவிற்கு இடவசதி உள்ளது. அதை செய்தாலும் ஆலையின் வருவாய் அதிகரிக்கும். அதன் மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கலாம். எத்தனால் உற்பத்தி செய்யலாம். கரும்பில் இருந்து மட்டுமின்றி மக்காச்சோளம், நெல் ஆகியவற்றில் இருந்தும் எத்தனால் எடுக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஆலையின் வருமானம் இன்னும் அதிகரிக்கும்.

இதை விவசாயிகளுக்கு உரம் மற்றும் இடுபொருட்களுக்கு மானியம் வழங்க பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் இன்னும் அதிக ஏக்கரில் சாகுபடி மேற்கொள்வர். கரும்பு வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவுகளையும்  சர்க்கரை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் ஆலை நிர்வாகம் இந்த சலுகைகளை செயல்படுத்தினால் கரும்புசாகுபடி செய்வதில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டுவர். இதனால் சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை அளவும் நிச்சயம் உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks