மழைக்காலத்திற்கு முன்பே வடிகால் பணிகளை முடிக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ்குமார் உத்தரவு!

மழைக்காலத்திற்கு முன்பே வடிகால் பணிகளை முடிக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ்குமார் உத்தரவு!
News Image

கடலூர் மாவட்டம் இயற்கைச் சீற்றங்கள், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகத் தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக அரசு இம்மாவட்டத்திற்குச் சிறப்புக் கவனம் செலுத்தி பல்வேறு வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, பரவனாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்பணைகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடகிழக்கு பருவமழை

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, கடலூர் தென்பெண்ணையாற்றில் உள்ள தடுப்பணை மற்றும் குண்டு உப்பலவாடி பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, பணிகளைத் தீவிரப்படுத்தி விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

இதனையடுத்து கடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் வடிகால் வாய்க்கால் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் முழுமையடையாமல் இருப்பதைக் கண்ட அமைச்சர், மழைக்காலத்தில் மட்டுமல்லாமல், அதற்கு முன்பே வடிகால் பணிகளை முடிப்பதுதான் மக்களின் பாதுகாப்பிற்கு அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். மேலும், பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட நிர்வாகம் தயார்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்குமார், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கனமழை பெய்யும் சூழல் ஏற்பட்டால், அனைத்து துறை அதிகாரிகளும் தங்களது பொறுப்புப் பகுதிகளில் தயார் நிலையில் இருந்து பணியாற்ற வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து, அப்பகுதி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்குமார் வலியுறுத்தினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks