BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?

BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
News Image

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டி20 போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணி நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 9 பந்துகள் மீதம் வைத்து எட்டி வெற்றி பெற்றது.

வாரி வழங்கிய இந்திய பவுலிங்:

நேற்றையப் போட்டியைப் பொறுத்தமட்டில் மைதானத்தில் பனியின் தாக்கம் அதிகளவு இருந்ததால் இந்திய பந்துவீச்சு எடுபடவில்லை. ஆனாலும், 250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

இந்திய அணியின் பந்துவீச்சு என்பது நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் மாறி வருகிறது. நேற்றைய போட்டி மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு கவலை அளிக்கும் வகையிலே இருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் 295 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 405 ரன்களையும், 3வது ஒருநாள் போட்டியில் 351 ரன்களையும் இந்திய பந்துவீச்சு விட்டுக்கொடுத்தது.

பலவீனமான இந்திய பவுலிங்:

முதல் டி20 போட்டியில் 171 ரன்களில் வெஸ்ட் இண்டீசைக் கட்டுப்படுத்தியிருந்தாலும், நேற்றைய போட்டியில் ரன்களை வாரி வழங்கியது. அடுத்தாண்டு 50வது ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற காரணத்தால் பும்ரா இந்த தொடரில் பங்கேற்கவில்லை. பும்ரா இல்லாத நிலையில் இந்த தொடரில் களமிறங்கிய அன்சுல் கம்போஜ், குர்னூர் ப்ரார், நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே ரன்களை வாரி வழங்கினர்.

கேள்விக்குறியான எதிர்காலம்?

இந்திய இளம் பந்துவீச்சாளர்களிடம் கடடுக்கோப்பாக பந்துவீசும் ஆற்றல் வெள்ளை நிற பந்து ஆட்டங்களில் குறைந்து வரும் நிலையில், இந்திய அணியின் சீனியர் பந்துவீச்சாளரான புவனேஷ்வர் இந்திய அணிக்குள் மீண்டும் வந்துள்ளார். அடுத்தாண்டு உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், பும்ரா, புவனேஷ், சிராஜ் கூட்டணி இந்திய பந்துவீச்சை வலுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. இவர்களுடன் முகமது ஷமியையும் களமிறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபகாலமாக இந்திய அணிக்காக முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்து வந்த ஹர்ஷித் ராணாவும் காயத்தால் அடிக்கடி சிக்கி வரும் நிலையில், வேகப்பந்து வீச்சின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்து வருகிறது. வரும் உலகக்கோப்பையில் பும்ரா, சிராஜ், புவனேஷ் கூட்டணியுடன் ஷமியும் இணைந்தால் இந்திய பந்துவீச்சு வலுவாகும் என்றாலும், அடுத்து வரும் உலகக்கோப்பைக்கு இளம் பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது.

பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் ஐபிஎல் மூலமாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஏராளமான வீரர்கள் தயார்படுத்தியுள்ள நிலையில், பந்துவீச்சிற்கு வீரர்களை உருவாக்குவதில் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய அணியின் எதிர்காலம் கருதி பிசிசிஐ புதிய பந்துவீச்சாளர்களை அணிக்காக உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks