மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிவ, மி.பி.வ, மற்றும் சீ.ம இன(BC, MBC/DNC) மாணவ, மாணவியர்கள் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Applications) விண்ணப்பித்தல்“

ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50. இலட்சத்திற்கு மிகாமல் உள்ள BC, MBC, DNC மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பம் பெறும் இடங்கள்:

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்)

இணையதளம்: www.bcw.tn.gov.in

குறிப்பு: மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.

சமர்ப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனம் Bonafied Certificate உடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

Renewal விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள் , Fresh விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பப்பட வேண்டும்.

Even Semester கட்டண இரசீதுகள் 15.01.2027-க்குள் அனுப்பப்பட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article