Anbil Mahesh: திமுகவை முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் எனம் தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.

அன்பில் மகேஷ் ஜாமின் மனு ஒத்திவைப்பு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக. திமுக முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இதற்கு பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்க்கை வைத்தனர். அதனை ஏற்று மனு மீதான விசாரணையை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் வரும் திங்கட்கிழமை வரை அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனிடையே, அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்:

இதனிடையே இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த, முன்னாள் திமுக எம்.எல்.ஏ., முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை பாதுகாப்பு மறைத்து வைத்து இருந்ததும் அன்பில் மகேஷ் தான் என்ற குற்றச்சாட்டு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முத்துக்குமார் சரணடைந்து இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், வழக்கை மேலும் வேகப்படுத்தும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்ஜாமின் முன்னேற்றக்கழகம் என தவெக விமர்சனம்

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், முன் ஜாமின் முன்னேற்றக் கழகம் என திமுகவை விமர்சித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மூலை முடுக்குகள் எல்லாம் ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல் சொத்துகள். ஆனால், எங்களை ஒன்றும் செய்யவே முடியாது என்று வீரவசனம் வேறு. முன் ஜாமீன் முன்னேற்றக் கழகம் ஊழல் வழக்குகளில் மூச்சுத் திணறிக்கொண்டே முட்டாள்தனத்தின் உச்சமான பஞ்ச் வசனங்களை உதிர்க்கிறது. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அதிர்ச்சியே இன்னும் தாங்கவில்லை.

இதையும் படியுங்கள்: Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?

இனி தங்களுக்கு ஆட்சி என்பதே எட்டாக் கனி என்பதையும் உணர்ந்ததால்தான் இரண்டாம் இடம் கிடைத்ததே பெரும்பாடு என்று கொசு அடித்துக் கொண்டிருக்கின்றனர் கொத்தடிமைகள். திருச்சியில் மட்டுமன்று. திரும்பிய பக்கமெல்லாம் முன்ஜாமீன் முன்னேற்றக் கழகத்தை முடித்துவிடவே தமிழக மக்கள் முடிவுடன் இருக்கின்றனர். எனவே, பஞ்சரான பஞ்ச் வசனங்களைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்று அன்புடன் எச்சரிக்கின்றோம்” என தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. திருச்சி மற்றும் சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டு வரும் நிலையில், தவெக இப்படி விமர்சித்துள்ளது.

Source: Read Full Article