கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜூன் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

அன்பில் மகேஷ் வழக்கு

அதில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷ்க்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது

இந்நிலையில் தனக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு செப்டம்பர் 30க்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது. மேலும் அன்பின் மகேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க சென்னை காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திமுக எப்போது பேச ஆரம்பித்தது?

மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்வதற்கு முன்னர் ஆளுநரிடம் அனுமதி பெற்றுக் இருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறைகள் எதுவும் இந்த வழக்கில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன் "ஆளுநரின் அதிகாரம் பற்றி எல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆட்டுக்கு தாடியும், மாநிலத்திற்கு ஆளுநர் பதவியும் தேவையற்றது என்று ஒப்பிட்டு பேசிய அதே நிலையில் தற்போதும் திமுக இருக்கிறதா? திமுகவை பொருத்தவரை ஆளுநர் பதவி ஒன்று தேவை இல்லாததுதானே? என கேள்வி எழுப்பினார்.

ஒத்திவைப்பு

இந்த வழக்கை பொறுத்த வரை தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நாளை மனுதாக்கல் செய்யவுள்ளார் என தெரிவித்தார்.அப்போது நீதிபதி லட்சுமி நாராயணன் அப்படியென்றால் முன்ஜாமீன் வழக்கு முடிவடையும் வரை வழக்கை ரத்து செய்யக் கோரிய இந்த மனு மீது நான் உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source: Read Full Article