Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!

Abhishek Sharma: அடிச்சா சிக்ஸரு.. எடுத்தா செஞ்சுரி! 35 பந்துகளில் சதம் போட்ட அபிஷேக் சர்மா! தூசியான நியூசி!
News Image

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் இரு டி20 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

199 ரன்கள் டார்கெட்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதிய 3வது டி20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 199 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது.

பவுண்டரி, சிக்ஸர்:

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சூர்யவன்ஷி - அபிஷேக் சர்மா ஆட்டத்தை தொடங்கினர். கடந்த போட்டியில் பெரியளவு சோபிக்காத சூர்யவன்ஷி இந்த போட்டியில் பட்டாசாய் கொளுத்தினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச அவருக்கு மறுமுனையில் அபிஷேக் சர்மா நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.

இருவரும் இணைந்து பவுண்டரிகள், சிக்ஸர்ளாகவே விளாச இந்தியாவின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. ஓவருக்கு 17 முதல் 20 ரன்கள் வீதம் இந்த ஜோடி விளாசியது. நியூசிலாந்தின் பிரதான பந்துவீச்சாளர்களான ஜேக்கப் டஃபி, மிலினே, ப்ராஸ்வேல் என யார் வீசினாலும் பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் மட்டுமே சென்றது.

35 பந்துகளில் சதம்:

சிறப்பாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டாக, மறுமுனையில் அபிஷேக் சர்மா பட்டாசாய் வெடித்தார். சூர்யவன்ஷி அவுட்டாவதற்கு முன்பே அரைசத்தைக் கடந்த அவர் அதன்பின்னரும் தனது வேகத்தைக் குறைக்கவில்லை. சூர்யவன்ஷி - அபிஷேக் சர்மா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 7.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து சிக்ஸரும், பவுண்டரியும் விளாசிய அபிஷேக் சர்மா அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அபாரமாக ஆடிய அவர் 38 பந்துகளில் 9 பவுண்டரி 11 சிக்ஸருடன் 113 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது.

அபாரம்:

இதனால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பும் மிக எளிதாக மாறியது. இந்திய அணி இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். இரு அணியைப் பொறுத்தமட்டிலும் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. இந்திய அணி தனது பேட்டிங் திறனால் அபாரமாக ஆடி தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.

தொடரும் அதிரடி:

மொத்தம் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை கைப்பற்றியுள்ளது. அபிஷேக் சர்மா நியூசிலாந்து மண்ணிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார். 26 வயதான அபிஷேக் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 70 டி20 போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 240 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 4 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும்.

இந்திய அணி டி20 போட்டிகளில் தொடர்ந்து அபாரமாக ஆடி வரும் நிலையில், வெளிநாட்டு மண்ணிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks