Aavin Price Hike: ஆவின் தயாரிப்புகளான பால் பொருட்களில் எதற்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்கள் விலை உயர்வு:

தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில், ஆவினில் உற்பத்தி செய்யப்படும் பால் பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாள் முதல் (அக்.28) அமலுக்கு வரவுள்ளது. ஆவின் தயாரிப்புகளான நெய், வெண்ணெய், பால்கோவா போன்ற ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், அத்தியாவசிய பொருளான பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவினின் எந்த பொருளுக்கு எவ்வளவு விலை உயர்வு?

ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயிர், நெய், வெண்ணெய், பிஸ்கட், பால்கோவா, குளிர்பானங்கள், முறுக்கு ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறது. அவற்றின் விலையை உயர்த்தி நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகபட்சமாக நெய் லிட்டருக்கு ரூ.80 உயர்த்தி ரூ.780 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.365க்கு விற்ற 500 மி.லி., நெய் 400க்கும், ரூ.160க்கு விற்ற 200 மி.லி., நெய் ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.30க்கு விற்ற மில்க் ஷேக் ரூ.35க்கும், ரூ.35க்கு விற்ற 500 மி.லி., தயிர் ரூ.40, வெண்ணெய் 100 கிராம் விலை 70 ரூபாயாகவும், 500 கிராமின் விலை ரூ.325 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?

ஆவின் இனிப்புகளின் விலைப்பட்டியல்:

ரூ.140க்கு விற்ற 250 கிராம் மைசூர்பாக் ரூ. 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில், 250 கிராம் குலாப்ஜாமுன் விலை 115 ரூபாயாகவும், 100 கிராம் ரசகுல்லாவின் விலை 50 ரூபாயாகவும், 200 கிராமின் விலை 95 ரூபாயாகவும், 100 கிராம் கோவாவின் விலை 60 ரூபாயாகவும், 500 கிராமின் விலை 280 ரூபாயாகவும், டேட்ஸ் கோவாவின் விலை 100 கிராம் 65 ரூபாயாகவும், ப்ரீமியம் மில்க் கேக் 250 கிராம் 140 ரூபாயாகவும், நெய் அல்வா 250 கிராம் 125 ரூபாயாகவும், நெய் பாதுஷா 250 கிராம் 205 ரூபாயாகவும், காஜு கத்லி 250 ரூபாய் 280 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஆவின் பொருட்களின் விலை என்ன?

வெண்ணெய் முறுக்கு 200 கிராம் 95 ரூபாயாகவும், ஆவின் மிக்சர் 200 கிராம் 110 ரூபாயாகவும், மில்க் பேடா 100 கிராம் 60 ரூபாயாகவும், மோர் 100 மில்லி 10 ரூபாயாகவும், யோக்ஹர்ட் 100 மில்லி 20 ரூபாயாகவும், லஸ்ஸி 200 மில்லி23 ரூபாயாகவும், தயிர் 200 கிராம் 21 ரூபாயாகவும், ப்ரீமியம் தயிர் ஒரு கிலோ 130 ரூபாயாகவும், வெண்ணெய் குக்கீஸ் 80 கிராம் 40 ரூபாயாகவும், கஸ்டர்ட் குக்கீஸ், கோகனட் குக்கூஸ், சால்ட், ஓட்ஸ் மற்றும் சாகோசிப்ஸ் குக்கீஸ் ஆகியவற்றின் 80 கிராம் தலா 40 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலை உயர்த்தப்பட நிலையில், இந்த பால் பொருட்களின் விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article