பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 8,397 ஏக்கரில் இருந்து 316 ஏக்கராகக் குறைப்பா? - அன்புமணி சரமாரி கேள்வி!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 8,397 ஏக்கரில் இருந்து 316 ஏக்கராகக் குறைப்பா? - அன்புமணி சரமாரி கேள்வி!
News Image

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் உடனடியாக அறிவிக்கை செய்து பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், சதுப்பு நிலங்களின் எல்லைகளை அறிவிக்கை செய்வதில் தாமதம் காட்டும் தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையம், தனியார் கட்டுமான நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டும் வேகமாகச் செயல்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய தாக்கப்பகுதியின் பரப்பளவை 316 ஏக்கராக குறைத்திருப்பதாக தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய மறுக்கும் ஈர நிலங்கள் ஆணையம், கட்டுமான நிறுவனங்களின் தொழில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தாக்கப்பகுதியை குறைப்பதில் காட்டும் வேகத்தைப் பார்க்கும் போது அது வேலை செய்வது அரசுக்கா, கட்டுமான நிறுவனங்களுக்கா? என்ற வினா எழுகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24&ஆம் தேதி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சில தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 30.09.2026&ஆம் நாள் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைப்பதற்கு  முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் இந்த முடிவை தாங்களும் ஏற்றுக் கொள்வதாக தனியார் கட்டுமான நிறுவனங்களும் மகிழ்ச்சியுடன் உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கின்றன.

சதுப்பு நிலங்களையொட்டிய தாக்கப் பகுதி எவ்வளவு பரப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில்  எந்த சிக்கலும் இல்லை. ஏனென்றால், தாக்கப்பகுதியில் கட்டுமானங்கள் முறைப்படுத்தப்படுமே தவிர, தடை செய்யப்படாது. அதனால், தாக்கப்பகுதி அறிவியல்பூர்வமாக தீர்மானிக்கப்பட வேண்டும்; கட்டுமானங்கள் முழுமையாக தடை செய்யப்படக் கூடிய பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளும்   முழுமையாக அளவீடு செய்யப்பட்டு, அறிவிக்கை செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இதைத் தான் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், ஓராண்டுக்கு முன் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்தத் தீர்ப்பால் கட்டுமான நிறுவனங்களின் வணிகம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவர்களின் நலன்களைப் பாதுகாக்க தாக்கப் பகுதியைக் குறைப்பதற்கு  மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் ஈர நிலங்கள் ஆணையம், பல பத்தாண்டுகளாக சீரழிந்து வரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதன் எல்லையை அளந்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று 22 மாதங்களுக்கு முன் 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை செயல்படுத்த ஆர்வம் காட்டாதது ஏன்? பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதை விட, தனியார் கட்டுமான நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பது தான் ஆணையத்தின் முதன்மைக் கடமையா? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வினா.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த, இஸ்ரோ அமைப்பால் 2021&ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் வரைபடத்தில் உள்ள 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளையும் வரையறை செய்து அறிவிக்கை செய்வது மிகவும் எளிதான ஒன்று தான். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும்  கடந்த ஆண்டு திசம்பர் 3&ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் தெரிவித்திருந்தது.

அதன்பின் 10 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் அறிவிக்கை செய்யாதது ஏன்? தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையம் கடந்த 2016&ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில் தமிழ்நாடு அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 வெளியிடப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் நோக்கம் சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்து பாதுகாப்பது தான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இதற்காக ஈர நிலங்கள் ஆணையம் துரும்பைக் கூட அசைக்கவில்லை. உச்சநீதிமன்றமே இது தொடர்பாக இரு முறை ஆணையிட்ட பிறகும் கூட ஈர நிலங்கள் ஆணையம் எதுவும் செய்யாமல், தனியார் கட்டுமான நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்க துடிக்கிறது என்றால், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கும் அதன் அதிகாரிகள் தமிழக அரசுக்காகவும், மக்களுக்காகவும் பணி செய்கிறார்களா அல்லது தனியார் கட்டுமான நிறுவனங்களுக்காக பணியாற்றுகிறார்களா?

தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையத்தின் இத்தகைய செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கக் கூடாது. திமுக ஆட்சியில் சதுப்பு நிலங்கள் அறிவிக்கை செய்யப்படாததற்கு பல பின்னணி காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக நிர்வாகத்திலும்,  தமிழ்நாடு ஈர நிலங்கள் ஆணையம் அதே போன்ற அணுகுமுறையை தொடர்வதை அனுமதிக்கக் கூடாது.

ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கிவிட்டது. அதையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அனைத்து சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் அறிவிக்கை செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து போராடி வருகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, பள்ளிக்கரணை உள்ளிட்ட  தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களையும் உடனடியாக அறிவிக்கை செய்ய தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ தொலைவுக்கு 6 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், 2 கி.மீ நீளத்திற்கு நடை பாதை அமைக்கும் பணிகளையும் உடனடியாக  கைவிடுவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களையும் உடனடியாக தகர்த்து அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks