செஞ்சியில் 7 வயது சிறுமி மாயம்: 5வது நாளாக தீவிர தேடுதல்; கரும்பு தோட்டங்களில் போலீஸ்!

செஞ்சியில் 7 வயது சிறுமி மாயம்: 5வது நாளாக தீவிர தேடுதல்; கரும்பு தோட்டங்களில் போலீஸ்!
News Image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியைத் தேடும் பணி 5-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று சோதனை, தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு, கிணறுகளில் தேடுதல், மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தித் தேடுதல் எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது கரும்பு தோட்டங்களில் தேடும் பணியில் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

செஞ்சி அருகே மாயமான சிறுமி - ஐந்தாவது நாளாக தேடும் போலீஸ்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியரின் 7 வயது மகள் ஹேமாவதி. இவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாள் அதிகாலை மாயமானதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் சிறுமியைப் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமி மாயமானதற்கான காரணம் என்ன, அவர் எங்கு சென்றார், யாரேனும் அழைத்துச் சென்றார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமி மாயமான வழக்கில் முக்கியத் தடயங்கள் கிடைக்குமா என்ற நோக்கில், ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் போலீசார் நேரில் சென்று விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை

வீடுகளில் உள்ள அறைகள், சுற்றுப்புறப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமி மாயமான நேரத்தில் கிராமத்தில் யார் யார் இருந்தனர், சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் நடமாடினார்களா, சிறுமி குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். கிராம மக்களிடம் தகவல்களைச் சேகரிப்பதுடன், கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தடயங்களைச் சேகரிப்பதற்காக, சென்னை தடய அறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறுமியின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் தடயவியல் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்பதைக் கண்டறியும் வகையில் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தகவல்கள் போலீசாரின் விசாரணைக்கு உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுமியைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள கிணறுகளில் கொக்கி உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மரக்காணம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்கு மடிவலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வலைகளைப் பயன்படுத்தி பெரிய கிணறுகளில் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. சிறுமி குறித்த எந்தவொரு தகவலும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேரடி தேடுதல் பணிகளுடன் தொழில்நுட்ப அடிப்படையிலான விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிடிஆர் (CDR) எனப்படும் செல்போன் அழைப்பு விவரப் பதிவுகள், டம்ப் சிடிஆர் (Dump CDR) எனப்படும் குறிப்பிட்ட பகுதி மற்றும் காலப்பகுதியில் பதிவான தொடர்புடைய செல்போன் தரவுகள், செல்போன் கோபுரத் தகவல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுமி மாயமான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதியில் பதிவான தகவல்களையும், விசாரணைக்கு உதவக்கூடிய தொலைபேசி அழைப்பு விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர். இத்தரவுகள் மூலம் சந்தேகத்திற்குரிய நடமாட்டங்கள் அல்லது விசாரணைக்கு உதவும் தகவல்கள் கிடைக்குமா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சிறுமியை விரைவாகக் கண்டுபிடிக்கும் நோக்கில், இரண்டு டி.எஸ்.பி.க்கள் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் மற்றும் விசாரணைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ட்ரோன் கேமராக்கள் மூலம் சுற்றுப்புறப் பகுதிகளைக் கண்காணித்தல், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல், கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருபுறம் கிராமம் முழுவதும் நேரடியாகத் தேடுதல் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது நாளாகத் தேடுதல் நீடிக்கும் நிலையில், சிறுமி மாயமானதற்கான பின்னணி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks