உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!

உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
News Image

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்

உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 5 பயணிகள் மற்றும் ஒரு விமானி உட்பட மொத்தமாக 6 பேர் பயணித்துள்ளனர். டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.

6 பேரும் உயிரிழப்பு

ஹெலிகாப்டர் மாயமான சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹெலிகாப்டரில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழுக்கள் நடத்திய தீவிர மீட்புப் பணியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டறியப்பட்ட நிலையில், பயணித்த ஆறு பேரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத் தகவலின்படி ஹெலிகாப்டரை இயக்கிய விமானி கேப்டன் ஹிமான்ஷு என அடையாளம் காணப்பட்ட நிலையில், ஐந்து பயணிகள் முறையே பிரதாபா, அருண், சங்கர் கௌடா, சுதீர்  மற்றும் எச்.எஸ்.நடராஜா ஆகியோர் என தெரியவந்துள்ளது. இறந்தோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks