கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!

கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
News Image

கியூபாவை கைப்பற்ற படைகளை அனுப்பப்போவதாக அமெரிக்க அதிபர் பேசிய விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப்,மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற்ம் முடிவுக்கு வந்தவுடன் அமெரிக்காவுக்கு அருகாமையில் உள்ள கியூபாவிற்கு போர்கப்பல்களை அனுப்ப உள்ளதாக பகிரங்கமாக அறிவித்து புதுப்பதற்றத்தை ஏற்படுத்தினார்.

கியூபா மீது அமெரிக்காவின் பார்வை திரும்ப காரணமென்ன?

உலகிற்கே நாட்டாமை போல் திகழும் அமெரிக்காவிற்கு அதனருகாமையில் இருந்தும் அடிபணிய மறுத்த நாடுதான் இந்த கியூபா. பரப்பளவிலோ, பொருளாதாரத்திலோ இராணுவ பலத்திலோ அமெரிக்காவுக்கு ஈடு இணையற்ற கியூபா அதற்கு பெரும் தலைவலியாக இருந்தது எனக்கூறுவதே பொறுத்தமாக இருக்கும். 1959-இல் அமெரிக்க ஆதரவாளராக செயல்பட்டு வந்த ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசை வீழ்த்தி கியூபாவில் ஆட்சியை பிடித்த பிடல் காஸ்ட்ரோ சோவித் யூனியனி ஆதரவாளராக செயல்பட்டார். கியூபாவில் பெருமளவிற்கு எண்ணெய் வளமோ, ஆயுத உற்பத்தியோ,வாகன உற்பத்தியோ இல்லாத நிலையில் அதன் பொருளாதாரத்திற்கு மூலதனமாக இருந்தது சர்க்கரை உற்பத்திதான். அதனால்தான் இன்றைக்கும் உலகின் சர்க்கரை கிண்ணம் என கியூபா அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் 67 ஆண்டுகால நிறைவேறாத ஆசை

கியூபாவில் பொதுவுடமை அரசை நிறுவி அமெரிக்காவிற்கு தொல்லையாக உருவெடுத்திருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, நாட்டிலிருந்த அனைத்து சர்க்கரை ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை தேசியமயமாக்கினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அதில் பெரும்பாலானவை அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை. சோவித் யூனியனுடன் சர்க்கரை ஏற்றுமதி ஒப்பந்தத்தை உறுதி செய்தது உள்ளிட்ட  விவகாரங்கள் காஸ்ட்ரோ அரசை வீழ்த்தியே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவிவந்த நிலையில், கியூபாவில் அணு ஆயுத தளத்தை நிறுவி அமெரிக்காவிற்கு பேரதிர்ச்சி கொடுத்தது ரஷ்யா.

கியூபாவை கைப்பற்றத்துடிக்கும் ட்ரம்ப்!

கடந்த 67 ஆண்டுகளாக அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், பல்வேறு இன்னல்களையும் ஏற்படுத்தியும் அசராத நாடான கியூபா, கடந்த சில ஆண்டுகளாக சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகிறது. பொருளாதார சிக்கல்கள், கச்சா எண்ணெய் கிடைக்காத நிலை, மின்சாரப்பற்றாக்குறை ஆகியவை கியூபாவை புரட்டி எடுத்து வருவதே உண்மை. பல்வேறு அமெரிக்க அதிபர்களும் கியூபாவிற்கு அழுத்தம் அளித்து வந்த நிலையில், தற்போதைய அதிபரான ட்ரம்ப் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks