ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
News Image

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மத்திய காலக் கடன்:

தமிழ்நாடு அரசின் 2026 - 2027ம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை, கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு எண் 2ன்படி, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ரூபாய் 5 ஆயிரம் கோடி மதிப்பில் ஊரகத் தொழிற்கடன் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மத்திய காலக் கடன்கள் வழங்கப்படும்.

ஒரு நபருக்கு 5 லட்சம் கடன்:

இத்திட்டத்தின்படி, ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கடன் வழங்கிய நாளிலிருந்து 36 மாதங்களுக்குள் வட்டியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணைச் சலுகைக் காலம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கடன்களை வழங்குவதற்கான மாதிரி ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் உரிய அங்கீகாரம் பெற்று கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு  நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 ஆயிரம் கோடி கடன்:

மேலும், 2026 -27ம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் மாவட்ட, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 2 ஆயிரம் கோடியாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூபாய் 3 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூபாய் 5 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் கடன் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கவும், கடன் தகுதியை சரிபார்த்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றவும், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வசூல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகள் தங்களது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த ஊரகத் தொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கீழ் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைக்காலம் பெரியளவில் இல்லாத சூழலில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks