ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?

ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
News Image

இந்திய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது இந்திய ரயில்வே. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்ய முக்கிய காரணம் நீண்ட தொலைவு பயணத்திற்கு கூட குறைந்த கட்டணமே போதும். இந்நிலையில் ரயில் டிக்கெட் முறையில் வரும் 27ஆம் தேதி முதல் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது. இந்தியாவில் ரயில் பயணம் செய்யும் சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நேரில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் பயண காப்பீடு அக்டோபர் 27 முதல் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.

இதுவரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே விருப்பத்தின் அடிப்படையில் காப்பீட்டு வசதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஆஃப்லைன் முறையில் அதாவது நேரடியாக ரயில் நிலைய கவுன்ட்டர்களில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு காப்பீடு ஆப்ஷன் வழங்கப்படாமல் இருந்தது. இந்த புதிய உத்தரவின் மூலம், கவுன்ட்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் இந்த காப்பீட்டு பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ரயில் விபத்துகளை தடுப்பதற்கான காவல் பாதுகாப்பு அமைப்பை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் செய்வதாக தொடரப்பட்ட ஒரு வழக்கின் விசாரணையின் போதே உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னதாக மே 11 அன்று, கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் காப்பீட்டை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் மாற்றப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

எனினும், இதில் எந்தவித அர்த்தமுள்ள முன்னேற்றமும் ஏற்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள், அதாவது 27ஆம் தேதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் கவுன்ட்டர் மூலம் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் ஆன்லைன் டிக்கெட்டுகளை போலவே காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான நேரடி பொறுப்பு ரயில்வே வாரியத்திற்கு மட்டுமே உள்ளது என்றும் கூறி விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ரயில்வேயில் டிக்கெட் பதிவின் போதே இந்த காப்பீடு ஆப்ஷன் காட்டும். இதற்கு வெறும் 45 பைசா முதல் செலுத்தினாலே போதும். இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் மற்றும் குறிப்பிட்ட சில சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய காப்பீட்டுத் திட்டத்தின்படி எதிர்பாராத விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை கிடைக்கும். நிரந்த உடல் குறைபாடுக்கு 10 லட்சம் ரூபாய், காயங்களுக்கு 2 லட்சம் ரூபாய் என காப்பீடு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் எளிதில் அணுகக்கூடிய போக்குவரத்து சாதனமான ரயிலில் எதிர்பாராத விபத்துகள் நேரும் போது, குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் இந்த காப்பீடு பயணிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மிக முக்கியமான நிதி உதவியை வழங்கும் என்பதால் மக்களிடம் இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks