50 ஆண்டுகள் ஆச்சு.. இந்தியா மகளிர் அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டி ஆடிய நாள் இன்று!

50 ஆண்டுகள் ஆச்சு.. இந்தியா மகளிர் அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டி ஆடிய நாள் இன்று!
News Image

இந்தியாவில் ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக அதிகளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்து வந்த பாதை கடினமானது.

இன்றுடன் 50 ஆண்டுகள்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றில் அக்டோபர் 31ம் தேதி பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் ஆகும். முதன்முறையாக தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தொடங்கியது இதே நாள் ஆகும். 1976ம் ஆண்டு இந்திய அணி முதன்முறையாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியது. இன்றுடன் 50 ஆண்டுகள் ஆவதை கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடி வருகின்றனர்.

முதல் டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 1976ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் ஆடியது. பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிளோரியா கில் 53 ரன்கள் விளாச, ஹால் 44 ரன்களும், லைலா வில்லியம்ஸ் 43 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக சோபா சிறப்பான ஆட்டத்தை அளித்தார். மற்றொரு வீராங்கனை சந்தியா 12 ரன்னில் அவுட்டானாலும் அடுத்துவந்த பவுசி 39 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய சோபா பண்டிட் 69 ரன்களில் அவுட்டானார்.

அசத்தல் பேட்டிங்:

அவர் ஆட்டமிழந்த பிறகு மிடில் ஆர்டரில் வந்த சாந்தா ரங்கசாமி அசத்தலாக ஆடி 74 ரன்கள் விளாசினார். இதனால், இந்திய அணி 269 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை குவித்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா தனது பந்துவீச்சால் நெருக்கடி அளித்தது. கிளோரியா 24 ரன்களும், பாட்ரிகா 29 ரன்களும் எடுக்க பின்வரிசையில் வந்த லைலா 56 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், 175 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.

டிரா ஆன ஆட்டம்:

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய 30 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது 5 நாள் நேரம் முடிவுக்கு வந்தது. இதனால், இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இந்திய அணிக்காக முதல் இன்னிங்சில் சுபாங்கி குல்கர்னி அசத்தலாக பந்துவீசினார். அவர் 11.4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சிலும் சுபாங்கி குல்கர்னி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அந்த காலகட்டத்தில் இந்திய மகளிர் டெஸ்ட் போட்டியில் தாங்கள் ஆடிய முதல் போட்டியிலே டிரா செய்தது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டை ஆடவர் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்சி செய்து கொண்டிருந்தது. அந்த நாட்டு மகளிர் அணியுடன் போட்டியை டிரா செய்வது என்பது அசாத்தியமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்திய இந்திய வீராங்கனை சுபாங்கி குல்கர்னி பேசும்போது, இந்த நாளை நான் எப்போதும் போற்றி நினைவு கூர்வேன் என்று தெரிவித்துள்ளார். லாலா அமர்நாத்திடம் பயிற்சி பெற்ற மாணவியான சுபாங்கி அவரிடம் இருந்து ஏராளமான யுக்திகளையும் கற்றுத்தேர்ந்துள்ளார். இந்த போட்டிக்கு பிறகு இந்திய மகளிர் அணியின் பேருந்தை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு கொண்டாடியது யாராலும் மறக்க முடியாத நிகழ்வாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks