ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!

ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!
News Image

கடந்த திமுக ஆட்சியில் கிட்னி திருட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தில், ஏழை, மக்கள் தங்கள் கடன் பிரச்சனைகளைத் தீர்க்க புரோக்கர்களின் தூண்டுதலின் பேரில் சட்ட விரோதமாக கிட்னியை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிக்கியது.

தனலட்சுமி சீனிவாசன் குழுமம்

இந்த மருத்துவக் கல்லூரி மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனின் தந்தை சீனிவாசனுக்கு சொந்தமானது. இவருக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பொறியியல் கல்வி நிறுவனங்கள், விவசாய கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்டவைகள் உள்ளன. சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் இருந்த ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை  தென்னிந்திய அளவில் பிரபலமான கல்வி நிறுவனமான தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம் சுமார் 150 கோடிக்கு வாங்கியது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. மீண்டும் தொடர் விடுமுறை.. எப்போது தெரியுமா?

81வது பிறந்த நாள்

இதுதவிர தனலட்சுமி சீனிவாசன் சிட் பண்ட்ஸ் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் சர்க்கரை ஆலை, ஓட்டல்கள், பேருந்து சேவைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிறுவனர் சீனிவாசனுக்கு 81வது பிறந்த நாள் கடந்த 7ம் பெரம்பலுாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில், வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற, 30,000 பேருக்கு அசைவ அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

திமுக எம்எல்ஏ கதிரவன்

இந்த பிறந்தநாள் விழாவில் தனது தந்தை சீனிவாசனுக்கு மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது ரூ.40 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதில், 5 பேர் அமரும் வகையில் உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks