காவிரி நீர் இல்லை... விவசாயம் பாதிப்பு! வறட்சி மாநிலமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

காவிரி நீர் இல்லை... விவசாயம் பாதிப்பு! வறட்சி மாநிலமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
News Image

தஞ்சாவூர்: காவிரியில் உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் வரும் 20-ம் தேதி முதல் பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவிரி நீர் உரிமை, விவசாயிகளின் வாழ்வாதாரம், வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரை உறுதியாகப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி நீர் தமிழ்நாட்டின் விவசாயத்துக்கும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் நெல் சாகுபடிக்கும் இன்றியமையாததாக உள்ளது.

உரிய நேரத்தில் போதுமான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். சாகுபடிக்காகச் செலவிடப்பட்ட தொகையை மீட்பதிலும், பயிர்களைப் பாதுகாப்பதிலும் விவசாயிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, காவிரி நீர் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள வேளாண் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களை நாடு முழுவதும் தடையின்றிக் கொண்டு செல்லும் தற்போதைய நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வேளாண் உணவு மண்டலமாகச் செயல்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேளாண் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும். உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், விவசாயிகளின் உழைப்புக்கு உரிய வருமானம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கைகளை மக்களிடமும், அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லும் வகையில், வரும் 20-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரை இயக்கத்துக்குப் பின்னர், அடுத்தகட்டப் போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் மணியரசன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் மணிமொழியன், ஜெகதீசன், தமிழக உழவர் முன்னணியைச் சேர்ந்த முருகன், இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், சாமி கரிகாலன், தமிழர் தேசிய களத்தைச் சேர்ந்த கலைச்செல்வம், பொறியாளர் செந்தில்வேலன், வைகறை, பழ. ராஜேந்திரன், தென்னவன், விடுதலைச் சுடர், இலக்குவன், வெள்ளம் பெரம்பூர் துரை ரமேஷ், பழனிக்குமார், ராமசாமி, சுந்தர வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காவிரி நீர் உரிமை, வறட்சி நிவாரணம், வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி பரப்புரை இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks