2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
News Image

"மது அருந்தி மனைவியுடன் தகராறு"

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வடக்கு சத்திரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் 32 வயதுடைய காளிப்பாண்டி. பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கபினேஸ்வரன் ( வயது 5), ரபினேஸ்வரன் ( வயது 4 ) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

காளிப்பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், மது அருந்தி விட்டு அடிக்கடி மனைவி மாரியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வடக்குசத்திரம் கிராமத்தில் உள்ள அருள்தரும் காளியம்மன் கோயிலில் புரட்டாசி மாத கொடை விழா நடைபெற்று வந்துள்ளது.

மாரியம்மாள் தனது இரண்டு மகன்களுடன் கோயிலுக்கு சென்று, அங்கு நடைபெற்ற முளைப்பாரி கும்மி பாட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

"பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு"

அப்போது மதுபோதையில் கோயிலுக்கு வந்த காளிப்பாண்டி, மனைவி மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரியம்மாள், தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பெட்ரோலை குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்த மாரியம்மாள் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், மேற்கூரையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாரியம்மாள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் , இரண்டு குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி காவல் ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின், உதவி ஆய்வாளர் சோலையப்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலத்த காயமடைந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்த கபினேஸ்வரன் முதல் வகுப்பும், ரபினேஸ்வரன் அங்கன்வாடியிலும் படித்து வந்தனர். மாரியம்மாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks